விரைவில் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல்
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலிலேயே வாக்காளர்களின் புகைப்படங்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக கோவையில் 8 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஆலோசனை நடத்தினார்.ஏற்கனவே புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இதையடுத்து தமிழகத்தில்புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க தேர்தல் ஆணையம்முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பூர்வாங்க ஆலோசனைப் பணிகள்தொடங்கியுள்ளன.
இன்று காலை கோவையில் 8 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நரேஷ்குப்தா இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைத் தொடர்ந்து தற்போதுபுகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாக்காளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். கள்ளஓட்டுக்களை தடுக்க முடியும். தற்போது புகைப்பட அடையாள அட்டைகள் உள்ளவாக்காளர்களின் பெயர்கள் முதலில் பட்டியலிடப்படும்.
அவர்கள் குறித்த விவரங்கள் வீடு வீடாக சென்று சரி பார்க்கப்படும். அதன் பின்னர்புகைப்பட அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு வீடுகளுக்குச் சென்றுபுகைப்படம் எடுக்கப்படும்.
பல்வேறு கட்டங்களாக இந்தப் பட்டியல் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் 6மாதங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார் நரேஷகுப்தா.
இதைத் தொடர்ந்து நாளை மதுரை செல்லும் நரேஷ்குப்தா அங்கு தென் மாவட்டஆட்சியர்களுடனும், மாலையில் திருச்சியில் மத்திய மண்டல ஆட்சியர்களுடனும்,நாளை மறுநாள் சென்னையில் வடக்கு மண்டல ஆட்சியர்களுடனும் நரேஷ்குப்தாஆலோசனை நடத்தவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications