என்னை அழிக்க கருணாநிதி சதி: வைகோ புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என்னை அரசியல்ரீதியாக ஒழித்துக் கட்ட கருணாநிதி முயற்சிக்கிறார் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

என்னால் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திமுக எம்.பிக்கள் பிரதமரிடம் புகார் மனுகொடுத்திருப்பது அடிப்படை ஆதாரமற்ற புகாராகும்.

எப்பாடுபட்டாவது அரசியல்ரீதியாக என்னை ஒழித்துக் கட்ட கருணாநிதிமேற்கொண்டிருக்கும் முயற்சியையே இது வெளிக்காட்டுகிறது.

உண்மையில் எனது வீட்டுக்கு கருணாநிதி மற்றும் மாறன் குடும்பத்தினர்தான்வாகனங்களில் வந்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.

மாறன் குடும்பத்தினரிடமிருந்து தொடர்ந்து எனக்கு தொலைபேசி மூலமு கொலைமிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.

எனது வீட்டுக்கு தொலைபேசி மூலம் வந்த கொலை மிரட்டல் தொடர்பாகவும், அந்ததொலைபேசி எண்களின் பட்டியலை பிரதமரிடம் நான் கொடுத்துள்ளேன்.

ஆனால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளை நிர்ப்பந்தப்படுத்தி, அதுதொடர்பான ஆதாரங்களை அழிக்கமுயன்று வருகிறார் தயாநிதி மாறன்.

இத்தனை முறைகேடுகளையும் செய்த பின்னர், என்னை அழிக்க இப்படிப்பட்டகொடூரமான புகாரைக் கூறியுள்ளது திமுக. தயாநிதி மாறனுக்கு எதிராகவோ அல்லதுஅவரது குடும்பத்தினருக்கு எதிராகவோ நான் தனிப்பட்ட முறையில் எந்தபகையுடனும் இல்லை.

டாடா குழும அதிபரை தயாநிதி மாறன் பகிரங்கமாக மிரட்டியது குறித்து நான் புகார்கூறினேன். பொதுமக்கள் அறியும் வகையில் அந்த சம்பவத்தை விளக்கி பேசினேன்.இதை இன்னும் ரத்தன் டாடா மறுக்கவில்லை.

எனது புகாரை மறுக்குமாறு இன்னும் கூட டாடாவை அவர்கள் நிர்ப்பந்தப்படுத்திவருகிறார்கள்.

கருணாநிதியின் பேரன் என்ற ஒரே தகுதியைக் கொண்ட தயாநிதி மாறன்,எம்.பியாகவும், மத்திய அமைச்சராகவும் வந்துள்ளார். அவருக்கும் திமுகவுக்கும்என்ன சம்பந்தம் இருக்கிறது?

தனது கட்டுப்பாட்டில் தொலைத் தொடர்புத்துறை இருப்பதால், பத்திரிக்கை மற்றும்டிவி துறையையே தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர அவர் துடிக்கிறார். சிலலட்சம் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட சன் டிவி இன்று பல கோடிகள் புழங்கும்மிகப்பெரிய நிறுவனமாக மாறியுள்ளது எப்படி என்பதை உலகம் அறியும்.

1993ம் ஆண்டு என்னைக் கொலை செய்ய வைகோ சதி செய்வதாக கருணாநிதிகுற்றம் சாட்டினார். அவரது மகன் ஸ்டாலினை கட்சித் தலைவராக்க நான் இடையூறாகஇருப்பேனோ என்று கருதித்தான் அப்படிப்பட்ட கொடூர புகாரை கூறி என்னைக்கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள்.

இப்போது கருணாநிதியின் உத்தரவின் பேரில் நான் தயாநிதி மாறனைக் கொலைசெய்ய முயற்சிப்பதாக கூறி பிரதமரிடம் புகார் மனு கொடுக்க வைத்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் எனக்குத் தொடர்பு இருப்பதாகவும், எனவே எனதுவெளிநாட்டு பயணங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் திமுகஎம்.பிக்கள் பிரதமரிடம் கோரியுள்ளனர். தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்குஆதரவாக கருத்து கூறுவதில் எந்தத் தவறும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டே கூறிவிட்டது.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தொடர்பான எங்களது நிலையில் எந்த மாற்றமும்இல்லை. ஆனால் இலங்கைத் தமிழர்கள் மீது எந்தவிதமான பரிவும், பற்றும், பாசம்,ஆதரவும் காட்டாத சிலர் தங்களை உலகத் தமிழர்களின் தலைவர் என்று கூறிக்கொள்வது வேடிக்கையாக உள்ளது.

எனது 30 ஆண்டு கால பொது வாழ்க்கையில் எங்கும், எப்போதும், எந்தக்காரணத்திற்காகவும் நான் கலவரத்தையோ, வன்முறையையோ தூண்டியதில்லைஎன்பதை மக்கள் அறிவார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+