ஆலடி அருணா கொலை வழக்கை விசாரித்த நீதிபதி சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஆலடி அருணா கொலை வழக்கை விசாரித்த நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்த வழக்கும் நெல்லை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கு நெல்லை முதலாவதுகூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி கணேசன் வழக்கை விசாரித்துவந்தார்.இந் நிலையில் கணேசன் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஆலடி அருணாவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து கணேசன் வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இந் நிலையில் வேறு ஒரு வழக்கை கணேசன் விசாரித்த விதம் சரியில்லை என்று கூறிஅவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஆலடி அருணா கொலை வழக்கும், நெல்லை மாவட்ட செஷன்ஸ்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications