விழுப்புரம்: வெடிகுண்டுத் தாக்குதலில் 7 பேர் படுகாயம்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வீடூர் கிராமத்தில் கள்ளக் காதலைக் கண்டித்த கிராமத்தினர் மீதுபாணடிச்சேரியைச் சேர்ந்த இளைஞர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 4 வயதுசிறுவன் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாண்டிச்சேரி மாநிலம் கரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எழுமலை. வீடூர் கிராமத்தைச்சேர்ந்தவர் சித்ரா. இவரது கணவர் கரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கரசூரில்கணவருடன் வசித்து வரும் சித்ராவுக்கும், எழுமலைக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டது.இந்த நிலையில் சித்ரா 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான வீடூருக்கு வந்தார்.அப்போது அவருடன் எழுமலையும் உடன் வந்துள்ளார். சித்ராவுடன், எழுமலையும்அவரது வீட்டிலேயே தங்கினார். இதனால் ஊரில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களதுகள்ளக் காதல் விவகாரம் ஊர் முழுக்கப் பரவியது.
ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் எழுமலையைக கூப்பிட்டு, இப்படியெல்லாம் நடக்கக்கூடாது. இதுபோன்ற விவகாரங்களை எல்லாம் உனது ஊரிலேயே வைத்துக் கொள்,இங்கே கொண்டு வரக் கூடாது என்று கடுமையாக கூறினார்.
இதனால் அவருக்கும், எழுமலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பஞ்சாயத்துத் தலைவரை பார்த்து கடுமையாக எச்சரித்து விட்டு அங்கிருந்துகிளம்பினார் எழுமலை.
நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் வீடூர் கிராமத்திற்கு வந்தார். கையில் நாட்டுவெடிகுண்டுகளையும் அவர் கொண்டு வந்திருந்தார். அவரைப் பார்த்த வீடூர்கிராமத்தினர் எழுமலையை தடுத்து நிறுத்தி ஊருக்குள் வரக் கூடாது, திரும்பிப் போஎன்று கூறியுள்ளனர்.
இதனால் அவர்களுக்கும், எழுமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.கோபமடைந்த எழுமலை, தன்னிடம் இருந்த வெடிகுண்டுகளை கிராமத்தினர் மீதுவீசினார்.
இதில் 4 வயது சிறுவன், 9 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.இதனால் ஆத்திரற்ற கிராமத்தினர் எழுமலையை சுற்றி வளைத்து சரமாரியாகதாக்கினர். இதில் எழுமலையும் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். படுகாயம்அடைந்த 7 கிராமத்தினரையும், எழுமலையையும் விழுப்புரம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீடூர் கிராமத்தில் போலீஸார் அதிக அளவில்குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications