நார்வேயில் விடுதலைப் புலிகள் குழு
ஓஸ்லோ:
இலங்கை அமைதி முயற்சிகள் குறித்து விவாதிக்க தமிழ்ச்செல்வன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் 5பேர் குழு நார்வே தலைநகர் ஓஸ்லோ சென்றுள்ளது.
![]() |
| தமிழ்செல்வன் குழுவினர் |
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் தவிர, புலிகளின் போலீஸ் படையின் தலைவர் நடேசன்,அமைதிச் செயலகத்தின் தஸைவர் புலித்தேவன் உள்ளிட்டோர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ஓஸ்லோ விமான நிலையத்தில் இவர்களை ஏராளமான இலங்கைத் தமிழர்கள் மலர் கொத்துக்கள் வழங்கிவரவேற்றனர்.
![]() |
| வரவேற்கும் நார்வே வாழ் தமிழர்கள் |
அமைதிக் கண்காணிப்புக் குழுவின் எதிர்காலம், அமைதி முயற்சிகள் ஆகியவை குறித்து விவாதிக்க புலிகளையும்இலங்கை அரசுத் தரப்பையும் நார்வே அரசு அழைத்துள்ளது. இதையடுத்து இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
நிரம்பி வழியும் மண்டபம் முகாம்:
இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால், மண்டபம் அகதிகள் முகாம் இட நெருக்கடியால் தவித்து வருகிறது.
கடந்த 1917ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோரப் பகுதியில் இலங்கை அரசு பல தொகுப்பு வீடுகளைக் கட்டியது.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தோட்ட வேலைக்காக செல்லும் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்காக இந்த தொகுப்புவீடுகளை இலங்கை அரசு கட்டியது. காலப் போக்கில் இந்த வீடுகளை இலங்கை அரசு பயன்படுத்தாமல் நிறுத்திக் கொண்டது. இதைத் தொடர்ந்து இந்தவீடுகளை இந்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு தமிழக அரசிடம் ஒப்படைத்தது.
இந்த இடம்தான் தற்போது அகதிகள் முகாமாக மாறியுள்ளது. இலங்கையில் இனப்போர் வெடித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி தமிழகத்திற்கு வந்ததமிழர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டனர். இதனால் இந்த கட்டடங்கள் அனைத்தும் அகதிகள் முகாமாக மாறின.
மண்டபம் அகதிகள் முகாம் தற்போது மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. சரியான மராமத்து செய்யாமல் கட்டடங்கள் பாழடைந்து உள்ளன.மேலும் இட வசதியை மீறி அதிக அளவில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
அகதிகள் முகாமில் மொத்தம் 1,955 இல்லங்கள் உள்ளன. இதில் 1,200 இல்லங்கள் பாதியளவு நிரந்தரமான வீடுகள். மற்றவை தற்காலிகஇல்லங்கள் ஆகும். நிரந்தர வீடுகளில் 420 வீடுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சிதிலமடைந்துள்ளன.
இதனால் அகதிகளாக வரும் தமிழர்கள்ள் 617 வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 1,955 வீடுகளில் 700 வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை.
கடந்த 1983ம் ஆண்டு முதல் இங்கு அகதிகள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம்முதல் இதுவரை மொத்தம் 2,542 அகதிகள்மண்டபம் முகாமுக்கு வந்துள்ளனர்.
இவர்களில் 871 பேர் பெண்கள், 340 சிறுவர்கள், 336 பேர் சிறுமிகள். அவர்கள் வருவதற்கு முன்பாக இந்த முகாமில் 748 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இட நெருக்கடி காரணமாக அகதிகளில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.மண்டபம் முகாம் இட நெருக்கடியால் ஒரு பக்கம் தவித்து வந்தாலும், மற்ற பிரச்சினைகளும் முகாமை நாறடித்து வருகின்றன.
உடைந்த குடிநீர்க் குழாய்கள், தேங்கிக் கிடக்கும் அசுத்த நீர், சுத்தமில்லாத அறைகள், குவிந்து கிடக்கும் குப்பைகள் என முகாமின் எந்தப் பக்கம்திரும்பினாலும் சுகாதார சீர்கேடு அப்பாவி இலங்கைத் தமிழர்களின் நிலையை மேலும் சோகமாக்குகிறது.
அடிப்படை வசதிகள் படு மோசமான நிலையில் இருப்பதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என இங்குள்ள அகதிகள் வேதனையுடன்கூறுகின்றனர்.
எங்களுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைப்பதில்லை, சாப்பாடும் சரியாக கிடைப்பதில்லை என்று புலம்புகின்றனர் அகதிகள்.
மண்டபம் அகதிகள் முகாமின் அவல நிலை குறித்து அரசுக்கு அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர். மின்சார வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை போதியஅளவில் தருமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
வேறு வழியின்றிதான் சொத்துக்களை, உறவினர்களை இழந்தும்தான் இலங்கைத் தமிழர்கள் அங்கிருந்து புலம் பெயர்ந்த அகதிகளாக தமிழகம் வருகின்றனர்.
அவர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்யாவிட்டாலும் கூட அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதுதான் மனிதாபிமான செயலாக இருக்க முடியும் என்பதை அதிகாரிகள்உணர்ந்து அகதிகள் முகாமையும், அதில் தங்கியுள்ள அகதிகளையும் உரிய முறையில்கவனிக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications