ஹெராயின்: ராகுல் மகாஜன் கைது
டெல்லி:
போதைப் பொருளை வைத்திருந்தது, உட்கொண்டது, சாட்சியங்களைக் கலைத்தது ஆகிய வழக்குகளில் மறைந்தமூத்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி போலீசார் நேற்றிரவு அவரைக் கைது செய்தனர். இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனையில்இருந்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.ராகுல் மகாஜனும், அவரது உதவியாளர் விவேக் மொய்த்ராவும் ஹெராயின் போதைப் பொருளை காஷ்மீரைச்சேர்ந்த ஷாகில் என்ற இளைஞர் மூலமாக வாங்கி உபயோகித்தனர்.
மது அருந்திவிட்டு முழு போதையில் இதை நுகர்ந்த இருவரும் மயங்கினர். இதில் மொய்த்ரா பலியாகிவிட்டார்.மகாஜன் தப்பிவிட்டார். அப்பல்லோவில் அனுமதிக்கப்ப்டட அவர் உடல் நிலை தேறிவிட்டார்.
இந் நிலையில் போதை மருந்தை உட்கொண்டது, அதை வைத்திருந்தது, போதை மருந்து அருந்தியதற்கானசாட்சியங்களைக் கலைத்தது ஆகிய வழக்குகளில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டாலும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்த மகாஜனை இன்று போலீசார்அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர்.
அங்கு சோதனை நடத்திவிட்டு காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரிக்கவுள்ளனர். தேவைப்பட்டால்அவரை அரசு மருத்துவமனையிலேயே சேர்க்கவுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மகாஜனுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனைகிடைக்கும்.
இதற்கிடையே மகாஜன போதை மருந்து உட்கொள்ளவில்லை என்று சொல்லி, பின்னர் பல்டியடித்த அப்பல்லோமருத்துவமனை மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ராகுலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications