பெட்ரோல் விலை ரூ.4, டீசல் விலை ரூ.4 உயர்வு: மக்கள் ஷாக்
டெல்லி:
பெட்ரோல், டீசலின் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைஉயர்வு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.அதே நேரத்தில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெயின் விலை உயர்த்தப்படவில்லை.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய எண்ணெயின் விலை தாறுமாறாக உயர்ந்ததையடுத்து இந்த விலை உயர்வுஅமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விலை உயர்வு தொடர்பாக முடிவு பிரதமர் தலைமையில்நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலைகள் உயத்தப்பட்டன. அதைத் தொடர்ந்துசர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் 2006-2007ம் ஆண்டில் மத்தியஎண்ணை நிறுவனங்களுக்கு ரூ. 73,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் விலையை லிட்டடுக்கு ரூ. 9.33ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10.43ம்,ரேசன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 17.16ம், சயையல் காஸ்விலையை சிலிண்டருக்கு ரூ. 114.45ம் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள்பரிந்துரை செய்தன.
ஆனால், விலை உயர்வுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து மத்தியபெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, இடதுசாரித் தலைவர்களை சந்தித்து பேசினர்.
இதற்கிடையே தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல்கள் வந்ததால் விலை உயர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்று அமைச்சரவை கூடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த அனுமதி அளித்தது. ஆனாலும்இந்த விலை உயர்வு போதுமானதாக இல்லாதததால் பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தையேசந்திக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் நிறுவனங்கள் மீதான சுமையைக் குறைக்க பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை 10 சதவிதத்தில்இருந்து 7.5 சதவீதமாகக் குறைக்கவும், எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 28,000 கோடி மதிபபுக்கு பங்குபத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்ளவும் அனுமதிப்புது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றபின் நிருபர்களிடம் பேசிய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, இந்தவிலை உயர்வு மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 9,200 கோடி வருமானம் கிடைக்கும் என்றும், விலைஉயர்வு நள்ளிரவு முதலே அமலுக்கு வரும் என்றார்.
ஆனால், இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசை ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகளும் பாஜகவும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் போராட்டம், பந்த் நடத்தப் போவதாகவும் அவை தனித்தனியேஅறிவித்துள்ளன.
மேலும் இந்த விலை உயர்வை காங்கிரஸ் தலைவர்களும் எதிர்த்துள்ளனர். விலை உயர்வு மிகவும் கடுமையாகஇருப்பதால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் கெட்ட பெயரும் ஓட்டுக்களில் பெரும் ஓட்டையும் விழும் என அக்கட்சியினர் கருதுகின்றனர்.
இதனால் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் பெட்ரோலின் விலை உயர்வு ரூ.4ல் இருந்து ரூ. 3 ஆகக் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்பெல்லாம் விலையை 50 பைசா, ஒரு ரூபாய் உயர்த்தி வந்தார்கள். இப்போது தான் முதன் முறையாகஒரேயடியாக 4 ரூபாய் உயர்த்தி வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது மத்திய அரசு.
இதனால் மத்திய அரசுக்கும் அதை ஆதரிக்கும் திமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிர்காலத்தில்மக்களும் பதிலுக்கு ஷாக் தரப் போவது மட்டும் நிச்சயம்.
உயர்த்தப்பட்ட விலையின்படி தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 51.83 (பழையவிலை ரூ. 47.49) ஆகவும், டீசலின் விலை ரூ. 35.95 (பழைய விலை ரூ. 33.72) ஆகவும் இருக்கும்.
இதனால் தமிழகத்தைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை ரூ. 4.34ம், டீசல் விலை ரூ. 2.23ம் உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications