சென்னையில் 300 ரவுடிகள் ஒரே நாளில் கைது
சென்னை:
சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போலீஸார் நடத்திய அதிரடிவேட்டையில் ஒரே நாளில் 300 ரவுடிகள் சிக்கினர்.
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவின் பேரில், கூடுதல்காவல் ஆணையர் ஜாங்கிட்டின் நேரடி மேற்பார்வையில் சென்னை நகர் மற்றும்புறநகர் பகுதிகளில் சமூக விரோதிகளை வளைத்துப் பிடிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது.சென்னை காவல் துறை மாவட்ட துணை ஆணையர்களின் தலைமையில்அமைக்கப்பட்ட தனிப்படையினர் சென்னை மாநகர் முழுவதும் பல்வேறுவழக்குகளில் சம்பந்தப்பட்ட்ட கொடும் குற்றவாளிகள், ரவுடிகள், சமூக விரோதிகள்,பழைய குற்றவாளிகள் மற்றும் வழக்கமான குற்றவாளிகள் நடமாட்டத்தைகண்காணித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் சென்னை நகரின் பிரபல ரவுடிகள் உள்பட 300 பேர் ஒரேநாளில் சிக்கியுள்ளனர். தாம்பரம் செந்தில்குமார், குரோம்பேட்டை பிரதாப், அம்பத்தூர்குட்டி பாலாஜி, ரமேஷ், டி.பி.சத்திரம் முரளி, காசிமேடு ரவிச்சந்திரன்,புதுவண்ணாரப்பேட்டை யுவராஜ், ஓட்டேரி ரவிக்குமார், சத்தியநாராயணன், மாதவன்உள்ளிட்டோர் இதில் முக்கியமானவர்கள்.
தொடர்ந்து ரவுடிகள், தலைமறைவாக இருந்து வரும் சமூகவிரோதிகளின்நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்து வளைத்துப் பிடிக்க திட்டம்தீட்டப்பட்டுள்ளது.
பழைய குற்றவாளிகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு அவர்கள் தற்போது என்னசெய்து வருகிறார்கள், எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டுவருகிறது.
போலீஸ் வேட்டையின்போது தேவைப்பட்டால் குற்றவாளிகளை சுட்டுப் பிடிக்கவும்தனிப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications