சுனாமி நிதி ஊழல்-விசாரணை கோரும் காங்கிரஸ்
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் சுனாமி நிதியை முறைகேடு செய்தது தொடர்பாக விரிவானவிசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிகோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில்சுனாமி மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவதற்காகமத்திய அரசு ரூ.7000 கோடி நிதியை அளித்தது.இந்த நிதியை அதிமுக அரசு முறையாக பயன்படுத்தாமல் பல்வேறு முறைகேடுகளில்ஈடுபட்டுள்ளது. சுனாமி நிவாரணத்திற்காக ரூ. 6000 கோடியும், மழை வெள்ளபாதிப்புக்காக ரூ. 1000 கோடியை மத்திய அரசு கொடுத்தது.
இந்தப் பணத்தை முறையாக செலவழிக்காமல் பதுக்கி விட்டது அதிமுக அரசு. இந்தமுறைகேடுகள் குறித்து திமுக அரசு விரிவான விசாரணை நடத்தி உண்மையைமக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி இப்போதே தயாராகதொடங்கியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும்தொடர்ந்து நீடிக்கும். தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து தோழமைக் கட்சிகளுடன்ஆலோசனை நடத்தவுள்ளோம்.
கட்சிக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். செயல்படாமல் உள்ளமாவட்ட தலைவர்கள் நீக்கப்படுவர்.
தமிழக ஆட்சியில் பங்கு தொடர்பாக சோனியா காந்தியும், கருணாநிதியும் நிச்சயம்பேசியிருப்பார்கள் என்று நம்புகிறோம்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் மனம் தளரத் தேவையில்லை. நல்ல முடிவாகஎடுப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications