அதிமுக பிரமுகர் கொலை: கூலிப் படைத் தலைவன் சுட்டுக் கொலை
சென்னை:
சென்னை அம்பத்தூரில் அதிமுக பிரமுகர் எம்.ஆர்.ரவி கொலை செய்யப்பட்டவழக்கில் தொடர்புடைய கூலிப் படைத் தலைவன், நாகூர் மீரான் சென்னை கொரட்டூர்அருகே போலீஸாருடன் நடந்த மோதலின்போது சுட்டுக் கொல்லப்பட்டான்.
சென்னை கப்பேரில் சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் நகர அதிமுக செயலாளர்எம்.ஆர்.ரவி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாகபோலீஸார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக அரசு என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளை ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் ஆம்பூர் நீதிமன்றத்தில்சரணடைந்தனர். அவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். கொலையைநேரில் பார்த்தவர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது 6 பேருக்கும் கொலையில் சம்பந்தம் இல்லாதது தெரியவந்தது. ஆனால் நாகூர் மீரான் என்பவர்தான் இந்த கொலையில் சம்பந்தப்பட்டமுக்கிய குற்றவாளி எனத் தெரிய வந்தது.
அவர் கூலிப் படைத் தலைவன் ஆவார். வியாசர்பாடியைச் சேர்ந்த நாகூர் மீரான் மீது 3கொலை வழக்கு, 30 க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில்உள்ளன. 4 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலும் இருந்துள்ளார்.
பணம் கொடுத்தால் கொலை செய்யக் கூடிய கூலிப் படைக்குத் தலைவனாக இருந்துவந்தார் நாகூர் மீரான். ரவியையும் இவர்தான் கொலை செய்ததாக போலீஸாருக்குத்தெரிய வந்ததும் அவரைப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர்.
கொரட்டூர் அருகே உள்ள மாதானம்குப்பம் என்ற இடத்தில் நாகூர் மீரான்பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கே போலீஸார் சென்றனர்.
இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நாகூர் மீரானை போலீஸார் சுற்றிவளைத்தனர். போலீஸாரைப் பார்த்த நாகூர் மீரான் அங்கிருந்து தப்ப முயன்றார்.கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை வீசினார். இதில் அந்த குண்டு வெடித்துச்சிதறியது. இதைப் பயன்படுத்தி நாகூர் மீரான் தப்ப முயன்றார்.
ஆனால் இன்ஸ்பெக்டர் சையத் ஜமால் நாகூர் மீரானை மடக்கிப் பிடிக்க முயன்றார்.அப்போது கையில் இருந்த அரிவாளால் ஜமாலை வெட்ட முயன்றார் நாகூர் மீரான்.இதையடுத்து கையில் இருந்த துப்பாக்கியால் நாகூர் மீரானை 2 முறை சுட்டார் ஜமால்.
இதில் சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே இறந்தார் நாகூர் மீரான்.
இந்த மோதலில் இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜன், அறிவுடை நம்பி ஆகியோருக்குலேசான காயம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த இடத்திற்கு மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் நேரில்சென்று விசாரணை நடத்திதனார். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கடந்த 2நாட்களில் மட்டும் 1000 ரவுடிகளை போலீஸார் பிடித்துள்ளனர். சென்னையில் மட்டும்300 பேர் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications