ஆட்டோ கிணற்றில் பாய்ந்து 5 பேர் சாவு
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலையோரம் இருந்த பாழடைந்தகிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து விழுந்து அதில் இருந்த 5 ஆட்டோ டிரைவர்கள்பரிதாபமாக பலியானார்கள்.
திண்டிவனத்தை அடுத்தள்ள சின்ன நெற்குணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோஓட்டுநர்கள் சிலர் அருகில் உள்ள கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் ஆட்டோ ஓட்டிவருகின்னர்.தினசரி மதிய சாப்பாட்டுக்காக அனைவரும் ஒரு ஆட்டோவில் ஊருக்கு வந்துசாப்பிட்டு விட்டுத் திரும்பிச் செல்வர்.
இதேபோல செவ்வாய்க்கிழமை பிற்பகலும் ஒரு ஆட்டோவில் 6 டிரைவர்கள் சின்னநெற்குணம் கிராமத்துக்கு கிளம்பினர்.
ஊரை நெருங்கியபோது, சாலையோரம் போய்க் கொண்டிருந்த உமா என்றபெண்ணின் மீது ஆட்டோ மோதியது. அவர் காயமடைந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து அவருக்கு என்ன ஆனதோ என்று ஆட்டோவை ஓட்டி வந்த அய்யனார்,ஓட்டியபடியே திரும்பிப் பார்த்தார். அப்போது ஆட்டோ தடுமாறி சாலையோரம்இருந்த பாழடைந்த கிணற்றில் விழுந்தது.
இந்தக் கிணறு 50 அடி ஆழமுள்ளது. இதில் 15 அடிக்கு கீழே ஆட்டோ மூழ்கியது.இந்த கோர விபத்தில் ஆட்டோ டிரைவர்கள் அய்யனார், பிரபு, சிவக்குமார்,ஜெயமூர்த்தி, பொன்னியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஞானவேல் என்பவர் மட்டும் காயத்துடன் உயிர் தப்பினார். அவரும், ஏற்கனவேஆட்டோ மோதியதில் காயமடைந்து கிடந்த உமாவையும் மீட்ட போலீஸார்இருவரையும் திண்டிவனம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த பகுதியை ஆட்சித் தலைவர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவல்துறைக்கண்காணிப்பாளர் பெரியய்யா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications