இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

பிரபல திரைப்பட இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி கவலைக்கிடமான நிலையில் மும்பைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இந்தி மற்றும் வங்க மொழி திரைப்பட இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி. 83வயதாகும் ரிஷிகேஷ் முகர்ஜி காதல் படங்களை படமாக்குவதில் மிகவும் திறமைவாய்ந்தவர்.

அவரது இயக்கத்தில் உருவான படங்களில் ஆனந்த் படம் மிகப் பெரிய வெற்றியைப்பெற்ற படம். இப்படத்தில் அமிதாப்பச்சன், ராஜேஷ் கண்ணா ஆகிய இருவரும்இணைந்து நடித்தனர்.

அமிதாப்பின் பல படங்களை இயக்கியவர் ரிஷிகேஷ் முகர்ஜி.

இவர் கடைசியாக இயக்கிய படம் ஜூட் போலே காவா காட்டே. அனில்கபூர், ஜூஹிசாவ்லா இப்படத்தில் நடித்திருந்தனர்.

கடந்த ஒரு வருடமாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தமுகர்ஜிக்கு, திடீரென சிறுநீரகம் பழுதடைந்தது. இதையடுத்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் ரிஷிகேஷ் முகர்ஜிஅனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செயற்கை சுவாசம் அவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. முகர்ஜியின் உடல் நிலைகவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் தர்மேந்திரா உள்ளிட்ட பல இந்தி திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்குச்சென்று முகர்ஜியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+