பெட்ரோல் விலை: 12ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
டெல்லி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால்பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைக்க முடியுமா என்பது குறித்துபெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவுடன் பிரதமர் மன்மோகன் சிங்இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த ஒரு வருடத்தில் மொத்தம் 7 முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுஉயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி முதல்அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் உள்ளகட்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கடும் எதிர்ப்பை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையில் குறைப்பு செய்யலாமாஎன்பது குறித்து அமைச்சர் தியோரா, இன்று பிரதமர் மன்மோகன் சிங்குடன்ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையின் இறுதியில், பெட்ரோல் விலையில் மட்டும் குறைப்பு இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 ரூபாய் வரை பெட்ரோல் விலை குறைக்கப்படக்கூடும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, நாடு முழுவதும் இன்று 2வது நாளாக பாஜக, இடது சாரிக் கட்சிகளின்சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
