பெட்ரோல்: 12ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 12ம் தேதி மாவட்டத்தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காங்கிரஸ், திமுக தலைமையிலானமத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெட்ரோல் விலையை 4 ரூபாயும், டீசல்விலையை 2 ரூபாயும் அதிகரித்துள்ளது.இதன் மூலம் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுமக்கள் விரோத அரசு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு 3 முறையும், 2005ம் ஆண்டு 2 முறையும் பெட்ரோல், டீசல்விலையை உயர்த்திய மத்திய அரசு இப்போது 6வது முறையாக பெட்ரோல், டீசல்விலையை உயர்த்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்என்பது மத்திய அரசுக்குத் தெரியும். அப்படி இருந்தும் விலையை உயர்த்தி அடித்தளதட்டு மக்களை சொல்லொணா துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலின்போது ஓட்டுக்களைப் பெறுவதற்காக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தமாட்டோம் என்று கூறி விட்டு ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல தேர்தல்முடிந்தவுடன் விலையை உயர்த்தி ஏழை, எளிய மக்களின் துயரத்திற்கு துணை போனதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும்,காங்கிரஸ் கட்சியைப் போல கடுமையான கண்டனத்துக்குரியவையாகும்.
இந்த நிலையில், காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கைக்கண்டித்து போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே வருகிற 12ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் உள்ளமத்தியஅரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்தப் போராட்டத்தில் கூட்டணிக் கட்சிகளான மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்,இந்திய தேசிய லீக், ஐஎன்டியூசி தொழிற்சங்கம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம்உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்து கொள்ளும்.
அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தவிர பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications