இலங்கை, புலிகளுக்கு நார்வே முக்கிய கேள்வி
கொழும்பு:
அமைதிக் கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அரசுடன் பேச விடுதலைப் புலிகள்மறுத்துவிட்டனர்.
மேலும் தங்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய நாடுகளை அமைதிக் கண்காணிப்புக்குழுவில் இருந்து விலகுமாறும் புலிகள் கூறியுள்ளனர்.ஓஸ்லோவில் புலிகள், இலங்கை அரசுத் தரப்பு ஆகியோருடன் நார்வே நடத்திய பேச்சுவார்த்தைகளின்போதுதங்களது இந்தக் கோரிக்கையை புலிகள் தெரிவித்தனர்.
அமைதிக் கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக இலங்கை அரசுடன்நேரடியாகப் பேச்சு நடத்துமாறு நார்வே தெரிவித்த யோசனையை புலிகள் நிராகரித்துவிட்டனர்.
ஐரோப்பிய நாடுகளின் பார்வையாளர்கள் கண்காணிப்புக் குழுவில் இருந்து விலக்கப்பட்டால் நார்வே, ஐஸ்லாந்துஆகிய நாட்டு பார்வையாளர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பர். இவர்களால் போர் நிறுத்த ஒப்பந்த அமலாக்கத்தைமுழுமையாக கண்காணிக்க முடியாது என்று நார்வே கூறியுள்ளது.
சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 37 பார்வையாளர்கள் இப்போதுஅமைதிக் கண்காணிப்புப் பணியில் உள்ளது. இந்தக் குழுவுக்கு சுவீடனைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உல்ப்ஹென்ரிக்சன் தான் தலைவராக உள்ளார். புலிகளின் கோரிக்கையின்படி ஐரோப்பிய நாடுகள் விலக்கப்பட்டால்,ஹென்ரிக்ஸனையும் நீக்கியாக வேண்டும்.
ஐரோப்பிய யூனியனைச் சாராத பிற புதிய பார்வையாளர்களை நியமிக்க 6 மாதமாவது ஆகும் என நார்வேபுலிகளிடம் தெரிவித்துவிட்டது.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி இலங்கைஅதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நார்வே தனித்தனியே கடிதம்அனுப்பியுள்ளது.
மேலும் நார்வே தலைமையிலான அமைதி கண்காணிப்புக் குழு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றுவிரும்புகிறீர்களா?, இந்தக் குழுவினருக்கு நீங்கள் பாதுகாப்பு உத்தரவாதம் தர முடியுமா? அமைதிகண்காணிப்புக் குழுவில் பிற நாடுகள் பங்கேற்கும் வகையில் ஒப்பந்ததில் திருத்தம் செய்யத் தயாரா என்றும்இந்தக் கடிதத்தில் நார்வே கேள்விகள் எழுப்பியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications