துபாய் விமானத்தில் குண்டுப் புரளி: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் துபாய் விமானத்தில்வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த புரளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னைக்கு வந்த அனைத்து விமானங்களும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.

நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் சென்னை போலீஸ் கமிஷ்னரின் கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு தொலைபேசிஅழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், துபாயில் இருந்து எமிரேட்ஸ் நிறுவன விமானத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது.

அது சென்னையில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறும் என்று மிரட்டிவிட்டு போனை வைத்தார். இந்தவிமானம் அதிகாலை 3.30 மணிக்கு 230 பயணிகளுடன் தரையிறங்க இருந்தது.

இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையையும், விமான நிலைய பாதுகாப்புப் படையினரையும்அலர்ட் செய்த சென்னை மாநகர போலீசார் மோப்ப நாய்ப் படைகள், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்தனர்.

மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

அந்த விமானம் அரை மணி நேரம் தாமதமாக 4 மணிக்குத் தரையிறங்கியது. பயணிகள் அவசரமாகவெளியேற்றப்பட்ட பின்னர் விமானத்தில் நுழைந்த வெடிகுண்டுப் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை.

இதையடுத்து அந்த விமானம் மீண்டும் 5.10 மணிக்கு மீண்டும் துபாய் புறப்பட்டுச் சென்றது. அதில் ஏறிய 151பயணிகளையும் உடமைகளையும் போலீசார் தீவிரமாக சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர்.

புரளி கிளப்பிய நபரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+