1,000 புதிய பஸ்கள் வாங்க தமிழக அரசு முடிவு
பெரம்பலூர்:
தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 1,000 பஸ்கள் வாங்கப்படும் என போக்குவரத்துத்துறைஅமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
பெரம்பலூர்-சென்னை இடையே விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களை இயக்கி வைத்து நேரு பேசுகையில்,தமிழக போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 17,300 பஸ்கள் உள்ளன. இதில் 8,500 பஸ்கள் பழையவை.இவற்றை வாங்கி 5 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. இந்த பஸ்களை சீர்படுத்த ரூ. 850 கோடி வரைதேவைப்படும்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மனதில் கொண்டு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,000பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 100 கோடி செலவிடப்படும்.
பள்ளி மாணவ, மாணவிகளின் இலவச பஸ் பாஸ் திட்டத்துக்கு ரூ. 75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டீசல் விலைஏற்றத்தால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்க ரூ. 25 கோடி சிறப்பு நிதியை மாநில அரசுஒதுக்கியுள்ளது என்றார்.
இந் நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராசாவும் கலந்து கொண்டார்.
சென்னையில் இருப்பது போல திருச்சியிலும் தொழில்நுட்பப் பூங்காவை தொடங்க மத்திய அமைச்சர் ராசா வழிசெய்ய வேண்டும் என்றும் நேரு கேட்டுக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications