பஸ் கட்டணத்தைக் குறையுங்கள்: ஜெ. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரயில் கட்டணத்தை விட பஸ் கட்டணம் குறைவாக இருக்கும் வகையில் பேருந்துக்கட்டணத்தைக் குறைப்போம் என்று கூறிய முதல்வர் கருணாநிதி இப்போது பஸ்கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை 6வதுமுறையாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதைக் கண்டித்து நாடு முழுவதும்போராட்டங்கள் நடந்த வருகின்றன.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும் கூட தமிழக அரசுவிற்பனை வரியை குறைத்து விலை உயர்விலிருந்து மக்களைக் காப்பற்றலாம். இதுநான் கூறிய யோசனை அல்ல, இந்நாள் தல்வர் கருணாநதி அந்நாள் எனது அரசுக்குகூறிய யோசனை ஆகும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகளை தீவிரமாக நிறைவேற்றிவருகிறார் என்று கருணாநிதியை திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும்பாராட்டுகிறார்கள். ஆனால் கருணாநிதி நிச்சயாக நிறைவேற்றியாக வேண்டிய ஒருஉறுதிமொழி உண்டு.

கடந்த காலத்தில் ஐந்து முறை மத்தியஅரசு பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தினாலும், இந்தியாவிலேயே பஸ் கட்டணத்தை உயர்த்தாத ஒரே மாநிலம்தமிழகம் தான் என்ற உண்மையை நான் உரைத்தபோதெல்லாம் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தமிழக அரசின் விரைவுப் பேருந்தின் சாதாரணக் கட்டணம்ரயில்வே சாதாரணக் கட்டணத்தை விட அதிகம்.

இந்த விலை வித்தியாசத்தைப் போக்கி எல்லாத் தடங்களுக்கும் பேருந்துக்கட்டணத்தை ரயில் கட்டணத்தை விட குறைக்க முடியுமா என்று எனக்கு சவால்விட்டார் கருணாநிதி.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் ரயில் கட்டணத்தை விட பேருந்துக் கட்டணத்தைக்குறைப்போம் என்றும் தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்திருந்தார். அதை இப்போதுசெயல்படுத்தும் வகையில், உடனடிாயக எல்லாத் தடங்களுக்கும் அரசுப் பேருந்துக்கட்டணத்தை ரயில் கட்டண அளவுக்குக் குறைப்பாரா? என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+