சென்னை-மதுரை எண்ணைக் குழாய்: கருணாநிதி தொடங்கி வைக்கிறார்
சென்னை:
ரூ. 498 கோடி செலவில் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ளஎண்ணைக் குழாய் திட்டத்தை முதல்வர் கருணாநிதி வருகிற 26ம் தேதி தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சென்னைக்கு வந்து முதல்வர்கருணாநிதியை சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெட்ரோலிய பொருட்களை எடுத்துச்செல்வதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையிலிருந்து மதுரைவரை ரூ. 498 கோடி மதிப்பில் எண்ணைக் குழாயை அமைத்துள்ளது.இந்தத் திட்டம் முடிவடைந்து வருகிற 26ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்துவைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டுதிட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக நேரில் வந்து கருணாநிதியைஅழைத்தேன். எனது அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை தவிர்க்க முடியாதது. அதனால் தான் சிறிதளவுஉயர்த்தியுள்ளோம். ஆனாலும் சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றின்விலையை நாங்கள் உயர்த்தவில்லை.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் எனநாங்கள் மாநில அரசுகளை வலியுறுத்தவில்லை. அது அவர்களது விருப்பத்திற்குஉட்பட்டது என்றார் தியோரா.
சந்திப்பின்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மாநில அமைச்சர்கள்துரைருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரிபாதிஉள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின்விற்பனை வரியில் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீதான விற்பனை வரி 34 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாகவும், டீசல்மீதான வரி 23 சதவீதத்திலிருந்து 22.25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.இதனால் பெட்ரோல் விலையில் 40 காசும், டீசல் விலையில் லிட்டருக்கு 22காசுகளும் குறைந்துள்ளன.
இந்த விலைக் குறைப்பை உடனடியாக ஆந்திர மாநில காங்கிரஸ் அரசுஅமல்படுத்தியுள்ளது. இதேபோல விற்பனை வரியைக் குறைக்க டெல்லி, மகாராஷ்டிரமாநில அரசுகளும் முடிவு செய்துள்ளன. இது தவிர காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்உள்ள அரசுகளும் விற்பனை வரியைக் குறைக்க முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில் விற்பனை வரியில் குறைப்பு செய்யப்பட மாட்டாது என்று முதல்வர்கருணாநிதி ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications