காங்கிரஸை சமாளிக்க திமுக புது பார்முலா
சென்னை:
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் கட்சியை சமரசப்படுத்த புதிய பார்முலாவைதிமுக வகுத்துள்ளது. இதன்படி மத்தியில் 2 திமுக அமைச்சர்களை வாபஸ் பெறஅக்கட்சி முன் வந்துள்ளது.
தமிழகத்தில் சிறுபான்மை பலம் உடைய திமுக தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன்ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்றுகூட்டணியில் உள்ள பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள்அறிவித்துள்ள நிலையில், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என தமிழக காங்கிரஸார்கோரி வருகின்றனர்.இதுதொடர்பாக இதுவரை எந்த முடிவும் எட்டப்படாமல் பிரச்சனை நீரு பூத்தநெருப்பாக இருந்து வருகிறது. ஆனால் ஆட்சியில் பங்கு கொடுக்காமல் நீண்டநாட்களுக்கு ஆட்சி நடத்த முடியாது, காங்கிரஸ் கட்சியினர் எந்த இடத்திலாவதுதங்களது புத்தியைக் காட்டி விடுவார்கள் என திமுக சந்தேகப்படுகிறது.
எனவே காங்கிரஸ் கட்சியை சமாளிக்க புதிய திட்டம் ஒன்றை திமுக தலைமை வகுத்துஅதை காங்கிரஸ் மேலிடத்திடம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டெல்லி சென்றபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம்,கருணாநிதியே மாற்றுத் திட்டம் குறித்து விவாதித்தாகக் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக இருப்பது போலக் காட்டிக்கொண்டாலும் அவர்களில் கணிசமான அளவு அதிமுக ஆதரவாளர்கள் இருப்பதைகருணாநிதி தெளிவாக உணர்ந்துள்ளார்.
எனவே இவர்களால் ஆட்சிக்கு எந்த சிக்கலும் வந்து விடக் கூடாது என்பதற்காகவேமாற்றுத் திட்டத்தை சோனியா காந்தியிடம் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதாக இருந்தாலும், அதிமுகஆதரவு எம்.எல்.ஏக்கள் தப்பித் தவறி அமைச்சரவையில் இடம் பெற்றால்அமைச்சரவையில் விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் அதிமுக தரப்புக்குப்போய் விடும் அபாயம் இருப்பதை சோனியாவிடம் கருணாநிதி விளக்கியுள்ளார்.
இதுபோன்ற காரணங்களுக்காகவே ஆட்சியில் பங்கு தர தான் தயங்குவதாகவும்சோனியாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அத்தனை கோஷ்டியினரும் தங்களுக்குஅமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்பார்கள், அப்படி ஒரு குழப்பமான நிலைஏற்பட்டால் அது மக்களிடையே திமுக கூட்டணி குறித்து தவறான அபிப்ராயத்தைஏற்படுத்தி விடும், கூட்டணியின் இமேஜ் சரிந்து விடும் என்பதையும் சோனியாவிடம்கருணாநிதி எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது.
இப்படி பல்வேறு பிரச்சினைகளைக் காரணம் காட்டி, ஆட்சியில் பங்கு என்பதுசாத்தியமில்லை என்று தெரிவித்த கருணாநிதி அதற்குப் பதில் ஒரு மாற்றுத் திட்டத்தைசோனியாவிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மத்தியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் 2 பேரை வாபஸ்பெற்றுக் கொள்ள திமுக தயார். அதற்குப் பதில், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தசிலரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படிச் செய்வதன் மூலம் காங்கிரஸாரை ஓரளவு சமாதானப்படுத்த முடியும்,தமிழகத்திலும் திமுக ஆட்சி எந்தவித சலசலப்பில்லாமல் நடத்த முடியும் என்றுகருணாநிதி எடுத்துக் கூறியதை சோனியா காந்தி கவனத்துடன் கேட்டுக் கொண்டதாககூறுகிறார்கள்.
நான் ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளேன். அடுத்து முதல்வர்ஆவேனா என்பது தெரியாது. எனவே இந்த ஆட்சிக்காலத்திலேயே பல்வேறுதிட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.
அதற்கு காங்கிரஸ் கட்சி மூலம் இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது. எனவே இந்தபுதிய திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் சோனியாவிடம் கருணாநிதிஉருக்கமாக கூறியதாக தெரிகிறது.
கருணாநிதியின் மாற்றுத் திட்டம் குறித்து சோனியா காந்தி தீவிரமாக பரிசீலித்துவருவதாகவும், இதுதொடர்பாக விரைவில் அவர் தனது மெளனம் கலைவார் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications