விஜயகாந்த்தின் கட்ட பஞ்சாயத்து-மன்சூர் தாக்கு
சென்னை:
நடிகர் விஜயகாந்த்தின் போக்குக்கு நடிகர்கள் நாசர், மன்சூர் அலிகான் ஆகியோர் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகர் சங்கத்திற்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்தொடர்பாக விவாதிக்க நடிகர் சங்கத்தின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சில நடிகர்கள் விஜயகாந்த்தின் போக்குக்குவெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்புஏற்பட்டது.
கூட்டத்தை விஜய்காந்த் தரப்பு வேக வேகமாக நடத்தி முடித்ததால் அதிருப்திஅடைந்த நாசர், நேராக விஜயகாந்த் இருந்த அறைக்குச் சென்றார். அங்கு ராதாரவிஉள்ளிட்ட பல நடிகர்கள கூடியிருந்தனர்.
அங்கு சென்ற நாசர், விஜயகாந்த்தைப் பார்த்து, கூட்டத்தை இப்படி முடித்திருக்கக்கூடாது. பல உறுப்பினர்கள் பேசுவதற்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்குவாய்ப்பளிக்காமல் கூட்டத்தை வேகமாக முடித்து விட்டீர்கள், இது என்ன நியாயம்என்றார்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. விஜயகாந்த் அமைதியாக நாசரைப் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கிருந்த நடிகர்கள் நாசரை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால் அப்படியும் கோபம் அடங்காத நாசர், நடிகர் சங்கத்திற்குள் அரசியல் வரக்கூடாது, அரசியலுக்கு இங்கு இடம் தரக் கூடாது. அரசியலுடன் சம்பந்தப்பட்டவர்கள்தேர்தலில் நிற்க அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறி விட்டு அங்கிருந்துவெளியேறினார்.
நாசரின் கருத்தை ஆமோதித்து நடிகர் எஸ்.வி.சேகரும் கருத்து தெரிவித்தார். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த நடிகர் மன்சூர் அலிகான்,
நடிகர் சங்கம் முறையாகவா செயல்படுகிறது, கட்டப் பஞ்சாயத்துத்தான்நடத்துகிறார்கள் என்று கோபமாக கூறினார்.
இதையடுத்து சில நடிகர்கள் அவரை அங்கிருந்து வலியுறுத்தி அழைத்துச் சென்றனர்.
ஆனாலும் மன்சூர் அலிகான் தொடர்ந்து பேசுகையில்,
சினிமா பிரச்சினைகள் பற்றிப் பேசாமல் வேகமாக கூட்டத்தை முடித்து விட்டார்கள்.விசிடி நடமாட்டம் அதிகரித்திதருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ளது போல இங்குபிலிம் சிட்டி இல்லை. நடிகர்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன.
இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் அவர்கள் பேசவில்லை. பேச நினைத்தவர்களுக்குவாய்ப்பு தரவில்லை.
நான் 8 வருடத்திற்குப் பிறகு சொந்தமாக பணத்தைப் போட்டு படம் எடுக்கிறேன்.ஆனால் குதிரை, நாய்களை வைத்துப் படம் எடுக்க முடியவில்லை. அதற்கு அனுமதிவாங்க வேண்டும் என்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையை பற்றி பொதுக்குழுவில் பேசலாம் என்றேன். ஆனால்விஜயகாந்த் பேச அனுமதிக்கவில்லை. தடுத்து விட்டார்.
அதற்குப் பதில், கழுதை படத்தில் கதாநாயகி (கழுதையை) ஏன்போஸ்டரில்ர்அடிச்சீங்க என்று என் மீது எரிந்து விழுந்தார்.
அது என் படம், கழுதை படத்தைப் போடுவேன், இல்லை குதிரைப படத்தைப்போடுவேன். உங்களுக்கென்ன?
மாயாஜால படங்களில் இப்படிப் போடலியா? முதல்வன் படத்தில் மணிவண்ணனைபாம்பாக் காட்டலியா? என் மேல மட்டும் ஏன் பாயறீங்க? நடிகர்கள் பிரச்சினையைப்பற்றிப் பேசாத குழு பொதுக்குழு அல்ல, வெங்காயக் குழு.
விஜயகாந்த் சில கைத்தடிகளை வச்சிக்கிட்டு கட்டப் பஞ்சாயத்து பண்றார்.
ராதாரவி தலைவராக இருந்த போது நாடக நடிகர்களை உறுப்பினர்களாக சேர்த்துவிட்டு விட்டார். அவர்களது பலத்தில்தான் இப்போது விஜயகாந்த் இருக்கிறார்.சினிமாக்காரர்கள் யாரும் இவரை விரும்பவில்லை.
முதலில் தேர்தலில் நிற்க மாட்டேன் என்பார். பின்னர் வற்புறுத்துகிறார்கள், நிற்கிறேன்என்பார். இதெல்லாம் சும்மா பம்மாத்து வேலை. விஜயகாந்த்துக்கு பதவி வேணும்.
தேர்தலில் இவரது கட்சி ஜெயிச்சதாக கூறி பொதுக்குழுவில் விஜயகாந்த்துக்கு மாலைபோட்டாங்க. இவர் ஒருத்தர்தானே ஜெயிச்சார். திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக,கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் நிறைய ஜெயிச்சிருக்காங்க.
அவர்களுக்குக் கீழேதானே இவர் கட்சி வந்திருக்கு. பாதிக் கிணறு தாண்டுவது சாதனைஇல்லை. அதனால்தான் நான் பாராட்டவில்லை.
இந்த பொதுக்குழுவில் நடிகர்களை பேச அனுமதிக்காததை நான் கண்டிக்கிறேன்.இதற்காக தேர்தலைப் புறக்கணிக்கப் போகிறேன் என்றார் மன்சூர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications