இந்திரா காந்திக்கு கோயில் !!!
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் பண்டிட் பினு சர்மா என்பவர் இந்திரா காந்திக்கு கோயில்கட்ட முடிவு செய்துள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சர்மா பன்டோல் ராவினெஸ் என்ற இடத்தில் இந்தக் கோயிலை கட்ட திட்டமிட்டுள்ளார்.கோயிலை தனது தந்தை யஷ்பால் சர்மாவுக்கு அர்ப்பணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.கோயில் போல்வே வடிவமைக்க ஒரு என்ஜினியரை பினு சர்மா நியமித்துள்ளார். கோயில் கட்டும் செலவுக்காகராணுவத்தில் பணியாற்றிய தனது தந்தைக்கு மாநில அரசு வழங்கிய நிலத்தின் ஒரு பகுதியை விற்கவும் பினு சர்மாமுடிவு எடுத்துள்ளார்.
இது குறித்து பினு சர்மா கூறுகையில்,
இந்திரா காந்தியை சக்தியின் அவதாரமாகவே கருதுகிறேன். அவருக்கு கோயில் கட்டுவது தான் என் லட்சியம்.இக்கோயிலை இந்திரா தாம் என்ற பெயரில் அமைக்க இருக்கிறேன்.
இக்கோயிலின் புனிதத் தன்மை காங்கிரசில் இருக்கும் மாசுக்களை அகற்றிவிடும். மற்ற கோயில்களைப் போலஇந்திரா காந்தி கோயிலிலும் வழிபாடுகள் நடத்தப்படும். இக்கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா ஆகியோரை அழைக்க இருக்கிறேன்.
ராஜஸ்தானில் இருக்கும் காங்கிரசார் சோம்பேறிகளாக உள்ளனர். கட்சியின் வளர்ச்சி மீது அவர்களுக்கு அக்கறைஇல்லை. ஆகையால் தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து இருக்கிறது.
ராஜஸ்தான் காங்கிரசுக்கு புத்துயிருட்டவும், தலித் மக்களும் பெண்களும் தங்கள் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் இந்திரா காந்தி கோயில் புதிய சக்தியை கொடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் சர்மா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications