மதானிக்கு உடல்நிலை பரிசோதனை: முதல்வருக்குஅறிக்கை- ஜாமீன் தர விஎச்பி கடும் எதிர்ப்பு
கோவை:
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள அரசியல் கட்சித் தலைவரானஅப்துல் நாசர் மதானியின் உடல் நிலை குறித்து அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுபரிசோதித்தது.
கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையதாககருதப்படும் கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர்மதானி கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை விடுவிக்க வேண்டும் என்று கேரள அரசு அவ்வப்போது கோரிக்கை விடுத்துவருகிறது.
இந் நிலையில் சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன்முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது மதானியை விடுவிப்பதுதொடர்பாக முக்கியமாக விவாதித்தார் அச்சுதானந்தன்.
மதானியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கஏற்பாடு செய்ய வேண்டும், ஜாமீனில் விடுதலை செய்ய உதவ வேண்டும் என்றுகருணாநிதியிடம் அச்சுதானந்தன் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து பரிசீலிப்பதாக கருணாநிதி உறுதியளித்திருந்தார். இந் நிலையில், கோவைமத்திய சிறைக்கு கோவை அரசு மருத்துவனையைச் சேர்ந்த டாக்டர்கள் செந்தில்நாதன்,கோவிந்தராஜ், பாலசுப்பிரமணியம், கீதாஞ்சலி, ஜெகநாதன் ஆகியோர் அடங்கிய குழுசென்றது.
முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் இந்த மருத்துவக் குழு அனுப்பப்பட்டது.இந்த டாக்டர்கள் குழு சிறைக்குச் சென்று அங்குள்ள சிறை மருத்துவர், சிறைஅதிகாரிகளுடன் பேசினர்.
இதுவரை மதானிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர்மதானியையும் சந்தித்து அவரது உடல் நிலையைப் பரிசோதித்தனர்.
மதானி உடல் நலம் குறித்த உண்மை அறிக்கையை முதல்வருக்கு சில நாட்களில்மருத்துவர் குழு அனுப்பி வைக்கும் எனத் தெரிகிறது. அதன் பிறகு மதானிக்குத்தேவைப்படும் சிகிச்சை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
மதானியை விடுவிக்க விஎச்பி எதிர்ப்பு:
இந் நிலையில் மதானியை விடுவிக்க வேண்டும் என்ற கேரள முதல்வரின்கோரிக்கையை, நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு புறக்கணிக்கவேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் வேதாந்தம்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வேதாந்தம் விடுத்துள்ள அறிக்கையில்,
சமீபத்தில் சென்னை வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், இரு மாநிலங்களுக்கும்இடையே உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவில்லை. அவரதுகவலையெல்லாம் மதானியாகத்தான் இருந்திருக்கிறது.
தீவிரவாத அமைப்பின் தலைவரான மதானியை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்என்பதுதான் அவரது கோரிக்கை. இதற்காகத்தான் அவர் கருணாநிதியைசந்தித்துள்ளார்.
பல ரயில் குண்ட வெடிப்புச் சம்பவங்களுக்கும், 1998ம் ஆண்டு கோவையில் நடந்தகுண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் மதானிதான் முக்கிய காரணம். அவரைசிறையிலிருந்து விடுவிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்று கருதித்தான்சுப்ரீம் கோர்ட் கூட அவரது ஜாமீன் மனுவை நிராகரித்து விட்டது.
கேரளாவில் ஓட்டு அரசியலை வைத்து ஆட்சியைப் பிடித்துள்ள மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, அங்குள்ள ஒரு பிரிவு மக்களை திருப்திப்படுத்துவதற்காக, நன்றிக்கடன் செலுத்துவதற்காக, ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சென்னைக்குவந்து தமிழக முதல்வருடன் பேச்சு நடத்தியுள்ளார் அச்சுதானந்தன்.
நாட்டின் பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு மதானியை விடுவிக்கக் கூடாது.இதுதொடர்பான கேரள முதல்வரின் கோரிக்கையை கருணாநிதி புறக்கணிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் வேதாந்தம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications