எஸ்எஸ்எஸ்சி, பிளஸ்டூ- மாநில அளவில் முதல் 3இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு கருணாநிதி பரிசு
சென்னை:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவ, மாணவியருக்கு முதல்வர் கருணாநிதி இன்று பரிசுகள் வழங்கிபாராட்டினார்.
தமிழை முதல் பாடமாக எடுத்து, தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களைப்பெறும் மாணவ, மாணவியரின் மேல் படிப்புக்கான முழு செலவுகளையும் மாநிலஅரசே ஏற்றுக் கொள்கிறது.
![]() |
இந்த ஆண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்முதல்வர் கருணாநிதியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அவர்களது மேல் படிப்புக்கு அரசு உதவுவது தொடர்பான உத்தரவுகளைகருணாநிதி மாணவ, மாணவியரிடம் வழங்கினார்.
மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் பரிசுகளையும் வழங்கினார்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த ஈரோடு மாணவி ரம்யா, நாமக்கல்மாணவி தாரணிஆகியோருக்கு தலா ரூ. 7,500க்கான காசோலையையும், 2வது இடம்பிடித்த மஞ்சு ரோஜா, பிரஷாந்த், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு தலா ரூ.6,000க்கான காசோலையையும்,
3வது இடம் பிடித்த பியூலா, மீனாகுமாரி, நிர்மல்குமார், பவித்ரா, நிறைமதிஆகியோருக்கு தலா ரூ. 5,000ம் வழங்கி வாழ்த்தினார் கருணாநிதி.
அதே போல பிளஸ்டூ தேர்வில் முதலிடம் பிடித்த சென்னை மாணவர் பரத்ராமுக்கு ரூ.15,000ம், 2வது இடம் பிடித்த சாந்த பிரகாஷ், விவேக் சந்தீப் ஆகியோருக்கு தலா ரூ.12,000மும், 3வது இடம் பிடித்த பானுப்பிரியாவுக்கு ரூ. 10,000மும் வழங்கினார்.
சாயப்பட்டறை அதிபர்கள் சந்திப்பு:திருப்பூர், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள், பல்வேறுஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருணாநிதியை இன்று தலைமைச் செயலகத்தில்சந்தித்து சாயப்பட்டறை கழிவுப் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
திருப்பூர், ஈரோடு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளிலிருந்துவெளியாகும் கழிவு நீரால் இப்பகுதிகளில் பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினைஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் கடுமையானநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முறையான சுத்திகரிப்பு வசதிகளை செய்யாதசாயப்பட்டறைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் இப்பகுதிகளைச் சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள், பல்வேறு நலஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முதல்வர் கருணாநிதியை இன்று தலைமைச்செயலகத்தில் சந்தித்து இப்பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது திருப்பூர், ஈரோடு எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரும்உடன் இருந்தனர்.



Click it and Unblock the Notifications
