15 வருடத்துக்கு பின் புதுவைக்கு விமான சேவை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியிலிருந்து சென்னை உள்பட 3 நகரங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஜாக்சன் ஏர்லைன்ஸ் தனியார் நிறுவனம் தனது டோர்னியர்-228 ரக குட்டி விமானத்தைபாண்டிச்சேரியில் இருந்து சென்னை, திருப்பதி மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு இயக்க ஆரம்பித்துள்ளது.டோர்னியர் ரக விமானத்தில் மொத்தம் 18 இருக்கைகள் உண்டு. ஒவ்வொரு நகரத்துக்கும் 9 இருக்கைகளுக்கானபொறுப்பை பாண்டிச்சேரி அரசு ஏற்கிறது. 9 இருக்கைக்கான பயணிகள் கிடைக்காவிட்டால் அதற்கானகட்டணத்தை அரசே ஏற்கும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விமானங்களை இயக்க ஜாக்சன் ஏர்லைன்ஸ்முன் வந்துள்ளது.
இந்த விமான சேவையின் தொடக்க விழாவில் பாண்டிச்சேரி துனை நிலை ஆளுநர் லகேரா கலந்து கொண்டுகொடியசைத்து விமான சேவையை தொடங்கி வைத்தார். முதல் விமானம் பாண்டிச்சேரியில் இருந்து திருப்பதிக்குபுறப்பட்டு சென்றது.
பாண்டிச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் எளிய முறையில் விழா நடந்தது. விழாவில் தலைமைசெயலார் கெய்ர்வால், சுற்றுலாத்துறை செயலாளர் அன்பரசு, ஜாக்சன் ஏர்லைன்ஸ் நிறுவன தலைவர் போஸ்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விமான சேவை குறித்து ஜாக்சன் ஏர்லைன்ஸ் நிறுவன வார்த்தக மேம்பாட்டு பிரிவு தலைவர் வினோத்குமார்கூறுகையில்,
பாண்டிச்சேரியில் காலை 7 மணிக்கு புறப்படும் விமானம் காலை 7.30 மணிக்கு சென்னை சென்றடையும்.அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்படும் விமானம் 8.20க்கு பாண்டிச்சேரி வந்தடையும்.
பாண்டிச்சேரியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூருக்கு 9.30 மணிக்குசென்றடையும். அங்கிருந்து 9.50 மணிக்கு புறப்பட்டு 10.40க்கு பாண்டிச்சேரி வந்தடையும்.
பாண்டிச்சேரியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் விமானம் திருப்பதிக்கு 11.50 மணிக்கு சென்றடையும்.அங்கிருந்து 12.10 மணிக்கு புறப்படும் விமானம் 1க்கு பாண்டிச்சேரி வந்தடையும்.
பாண்டிச்சேரி-சென்னை கட்டணம் ரூ. 1,721. பாண்டிச்சேரி-திருப்பதி மற்றும் பெங்களூருக்கான கட்டணமம் ரூ.2,721 ஆக இருக்கும்.
ஞாயிறுக் கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இந்த விமான சேவை இருக்கும் என்றார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் பாண்டிச்சேரி விமான நிலையத்தில் முதல் முறையாக பயணிகள் விமானம்இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications