ஜெ விஷமத்தனம்: அமைச்சர் ராஜா புகார்
சென்னை:
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதிதராமல் உள்ளது என்ற ஜெயலலிதாவின் புகாரை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்ஏ.ராஜா மறுத்துள்ளார்.
சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை அமைச்சர் ராஜா கையெழுத்திடாமல் இழுத்தடித்து வந்த காரணத்தால்தான்இத்திட்டம் நடைறைப்படுத்தப்படவில்லை.இப்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையிலாவது ராஜா தாமதப்படுத்தாமல்கையெழுத்துப் போட வேண்டும். பழத்தை நாங்கள் உரித்து வைத்து விட்டோம்,அதை சாப்பிட வேண்டியதுதான் திமுகவின் இப்போதைய வேலை என்று கூறிஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து அமைச்சர்மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா பழம் உரித்தது எப்படி என்று கிண்டலடித்து ஒரு விளக்கஅறிக்கையை வெளியிட்டார்.
இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் ராஜாவும் ஒரு பதில் அறிக்கையைவெளியிட்டுள்ளார்.
அதில், இதே புகாரைத்தான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதியும் ஜெயலலிதாதெரிவித்திருந்தார். அதற்கு அதே நாளிலேயே நான் விரிவான விளக்கம்அளித்திருந்தேன். நிலைமை இப்படி இருக்க நான் கையெழுத்துப் போடவில்லைஎன்று மீண்டும் மீண்டும் ஜெயலலிதா கூறுவது விஷமத்தனமானது.
இது அடிப்படை ஆதாரமற்ற புகார். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாகமத்திய கடல் மீன்வள ஆய்வு மையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்து பதில்அளிக்குமாறு மத்திய அரசு ஜெயலலிதா தலைமையிலான முந்தைய தமிழக அரக்குகோரியது. ஆனால் அதற்கு தமிழக அரசு பதிலே அளிக்கவில்லை.
இத்திட்டம் தாமதமானதற்கு ஜெயலலிதா அரசுதான் முழுக்கப் பொறுப்பேற்கவேண்டும். நிலைமை இப்படி இருக்க என் மீதும், திமுக மீதும், மத்திய அரசு மீதும்ஜெயலலிதா குற்றம் சாட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார் ராஜா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications