சாமியாரின் மெளன சாட்சி: மதுரை கோர்டடில் சலசலப்பு!
மதுரை:
கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான மெளன சாமியார் வாய் திறந்து பேசமறுத்ததால் மதுரை நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தனது சாட்சியத்தைஅவர் எழுதிக் கொடுத்தார்.
மதுரை அருகே உள்ள வீரபாஞ்சான் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி.கடந்த 1998ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் உள்ளே வந்து கொள்ளையில் ஈடுபட்டது.பாலுச்சாமி குடும்பத்தினரை தாக்கி 13 பவுன் தங்க நகைகள், 15,000 பணம்ஆகியவற்றை திருடிக் கொண்டு கிளம்பினர். போகும்போது பாலுச்சாமியின் மகன்செளந்தரபாண்டியை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டுக்காயப்படுத்தி விட்டுச் சென்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக பால், பூச்சி ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. வழக்குவிசாரணை நடந்து வந்த நிலையில் செளந்தரபாண்டி திடீரென சாமியாராக மாறிவிட்டார்.
அத்தோடு 12 ஆண்டுகளுக்கு மெளன விரதம் இருக்கப் போவதாகவும் அவர்அறிவித்து விட்டார்.
இந் நிலையில், கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வாய் திறந்துசாட்சியம் அளிக்க மறுத்து விட்டார் செளந்தரபாண்டி. இதனால் வழக்கு நேற்றைக்குஒத்திவைக்கப்பட்டது.
நேற்று விசாரணைக்கு வந்தபோதும் வாய் திறந்து பேச மறுத்தார் செளந்தரபாண்டி.இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
பலமுறை பேசக் கோரியும் செளந்தரபாண்டி வாய் திறக்க மறுத்து விட்டார்.
இதையடுத்து அவரை கையால் எழுதி சாட்சியம் அளிக்குமாறு அரசு வழக்கறிஞர்கேட்டுக் கொண்டார். அதன்படி தனது சாட்சியத்தை எழுதிக் கொடுத்தார்ரசெளந்தரபாண்டி. அவரை எதிர்த்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரைணசெய்தபோதும் எழுதிக் கொடுத்தே தனது பதிலைத் தெரிவித்தார் செளந்தரபாண்டி.












Click it and Unblock the Notifications