ஆண்டித்தேவர் மகன் படுகொலை: உறுதி செய்த சிபிஐ
மதுரை:
முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டித்தேவரின் மகன் சிவராமன் 8 ஆண்டுகளுக்கு முன்புபடுகொலை செய்யப்பட்டு விட்டதாக சி.பி.ஐ. உறுதிப்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்ஆண்டித்தேவர். இவரது முதல் மனைவியின் மகன் சிவராமன், கடந்த 1998ம் ஆண்டுதிடீரென காணாமல் போய் விட்டார்.சிவராமன் குறித்து ஆண்டித்தேவரிடம் உறவினர்கள் கேட்டபோது வேலைக்காகசிங்கப்பூர் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார் ஆண்டித்தேவர்.
ஆனால் அவரது பதிலில் சந்தேகம் அடைந்த சிவராமனின் தாய்மாமன் மதுரை திடீர்நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சிவராமனை ஆண்டிதேவரே கொன்றுஇருக்கலாம் என சந்தேகம் கிளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை பின்னர் சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.
ஆனால் விசாரணை மந்த கதியில் இருந்ததால் இதை சிபிஐக்கு மாற்றக் கோரிசிவராமனின் உறவினர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிட்டனர்.
அதை ஏற்ற உயர்நீதிமன்றக் கிளை சிபிஐ விசாரணைக்கு சிவராமன் வழக்கைமாற்றியது. இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.ஆண்டித்தேவரிடம் பலமுறை விசாரணை நடத்தினர்.
கடைசியாக சிவராமன் காணாமல் போனதாக கூறப்படும் கொடைக்கானல் மலையில்உள்ள வருசநாடு பகுதியில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், 1998ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்பகுதியில் தலை வெட்டப்பட்ட நிலையில் ஒருவாலிபரின் பிணம் கிடைத்தது தெரிய வந்தது.
கொல்லப்பட்டவர் யார் என்று தெரியாததால் வழக்கை கொடைக்கானல் போலீஸார்முடித்து விட்டனர். இந்த நிலையில் அது ஆண்டித்தேவரின் மகனாக இருக்கக் கூடும்என சிபிஐ அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பிணம்புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எலும்புக் கூடுகளை வெளியே எடுத்தனர்.
அவற்றை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பினர். மேலும் ஆண்டித்தேவரிடம்டி.என்.ஏ. சோதனை நடத்த மதுரை உயர்நீதிமன்ற்க கிளை உத்தரவிட்டது.இதையடுத்தி அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.
இந்த இரு சோதனைகளின் முடிவுகளும் தற்போது வந்துள்ளன. அதன்படி வருசநாடுபகுதியில் கொல்லப்பட்ட பிணத்தின் உடலுக்குரியவர் சிவராமன் என்பது உறுதியாகத்தெரிய வந்துள்ளது. சிவராமனைக் கொலை செய்தது யார் என்ற கோணத்தில் தற்போதுசிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.
இதற்காக ஆண்டித்தேவரிடம் ஆழ்நிலை மயக்க சோதனை நடத்த முடிவாகியுள்ளது.இதற்காக விரைவில் அவரை பெங்களூருக்கு கொண்டு செல்லவும் சிபிஐ அதிகாரிகள்திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications