தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா?: முடிவெடுக்க வேண்டியவர் சோனியா தான்- கிருஷ்ணசாமி
சென்னை:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பது குறித்து சோனியா காந்தி தான் முடிவெடுப்பார் என தமிழககாங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவரது பேட்டி விவரம்:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மாநில அளவில் புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து அனைத்துத்தலைவர்களிடமும் பேசி வருகிறேன். ஒத்த கருத்து எட்டப்பட்டவுடன் மாவட்டத் தலைவர்கள் மூலமாக பட்டியல்தயாரிக்கப்பட்டு மேலிட ஒப்புதல் பெறப்படும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா, ஆட்சியில் பங்கு உண்டா இல்லையா என்பது குறித்த முடிவை அகில இந்தியதலைமை தான் எடுக்க வேண்டும். அதை முடிவு செய்ய வேண்டியது சோனியா காந்தி தான். நாங்கள் அல்ல.தலைமை எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வோம்.
தலைமையின் முடிவை காங்கிரஸ்காரர்கள் எதிர்க்க மாட்டார்கள். அவ்வாறு எதிர்த்துப் பேசுபவர்களும், போஸ்டர்ஒட்டுபவர்களும் உண்மையான காங்கிரஸ்காரர்களே அல்ல. காங்கிரஸ் கட்டுப்பாடு உள்ள கட்சி.
ஆட்சியில் பங்கு தராவிட்டால் அதிருப்து உருவாகும் என் பேச்சுக்கே இடமில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியில்குழப்பமும் இல்லை. இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலையும் சந்தித்து வெற்றி பெறும்.
உலக அளவில் குரூட் எண்ணெயின் விலை உயர்ந்ததால் தான் பெட்ரோல்-டீசல் விலையை வேறு வழியில்லாம்உயர்த்த வேண்டி வந்தது. இதை குறை சொல்லும் ஜெயலலிதாவின் அதிமுக-பாஜகவோடு கூட்டணி வைத்துமத்தியை ஆண்டபோது 4 முறை பெட்ரோல் விலையை உயர்த்தினார்கள்.
அப்போது ஜெயலலிதா ஏன் போராட்டம் நடத்தவில்லை? மாநிலத்தில் ஏன் பெட்ரோல் மீதான வரியைக்குறைக்கவில்லை? ஜெயலலிதா நடத்தும் போராட்டத்தில் மக்கள் நலன் எதுவும் இல்லை. அது அரசியல்லாபத்துக்காக நடத்தும் ஸ்டண்ட்.
திமுக கூட்டணியில் இருப்பதால் அந்தக் கட்சி சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் காங்கிரசுக்குஇல்லை. திமுக ஆட்சியில் குறை இருந்தால் சுட்டிக் காட்டுவோம். அதற்கு கருணாநிதி நிச்சயம் மதிப்புகொடுப்பார்.
சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை அதிமுகவினர் தாக்கியது வெட்கப்பட வேண்டிய, வேதனையானவிஷயம். இந்த கலாட்டாவையெல்லாம் நிறுத்திவிட்டு மக்களுக்காக அதிமுக உழைக்கலாம்.
மதுரையில் ஸ்டாலின் மீதான தாக்குதலில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது என்றார் கிருஷ்ணசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications