சென்னையில் காலரா: ஒருவர் பலி
சென்னை:
தென் சென்னையில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் காலரா பரவியுள்ளது. இதில்ஒருவர் பலியானார். 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சிக்குன் குனியா நோயால் தமிழகத்தின் 17 மாவட்டங்கள்பாதிக்கப்பட்டுள்ளன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் காய்ச்சலால்அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தென் சென்னையில் காலரா பரவியுள்ளது. சென்னைதிருவான்மியூரை அடுத்துள்ள கொட்டிவாக்கம் பகுதியில் காலரா தாக்கியுள்ளது.80க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி காரணமாக பாதிக்கப்பட்டுதண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலராவுக்கு குணசேகர் என்ற கார் டிரைவர் பலியாகியுள்ளார். இதுதவிர குப்பம் என்றபகுதியிலும் காலரா தாக்குதல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. காலரா தாக்குதலைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார பணிகள் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோதலைமையில் மருத்துவக் குழுக்கள் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட அருகாமைப் பகுதிகளுக்கும்காலரா பரவி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாந்தி, பேதியால் நோய் பரவாமல் தடுக்க தடுப்புமாத்திரைகளையும் மருத்துவர்கள் குழு வீடு வீடாக விநியோகித்து வருகிறது.
தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்குமாறும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகமருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த மழை, வெள்ளத்தின்போது தேங்கிய தண்ணீர் இன்னும் கூடவடியாமல் உள்ளது. இந்த அசுத்த நீர் குடிநீருடன் கலந்து அதனால் காலராஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications