உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: விஜயகாந்த்
சென்னை:
மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு உள்ளாட்சி தேர்தலுக்கு பின் கேஸ் விலையை உயர்த்தும் எனவிஜயகாந்த் ஆருடம் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால்தான் சட்டமன்ற தேர்தலில் 28லட்சம் மக்கள் எங்கள் கட்சிக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். அரசியலில் லஞ்சத்தை ஒழிக்க ஆதரவு தாருங்கள்என்று மக்களிடம் கேட்டேன். அதற்காக இவ்வளவு வாக்களித்திருப்பதை நான் பெரிதாக நினைக்கிறேன்.
இந்த ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று சொல்லக்கூடாது என கருணாநிதி சொல்லி இருக்கிறார். ஜந்தாவதுமுறையாக அவர் அமைத்துள்ள இந்த ஆட்சியை எப்படி கொண்டு போகிறார் என்று பார்க்க வேண்டும். நிறையதிட்டங்களை நிறைவேற்றப்போவதாக சொல்லி கொண்டு இருக்கிறார்.
அதையெல்லாம் எப்படி செய்வார் என்பதை பார்க்க வேண்டும். இந்த ஆட்சி தாக்கு பிடிக்குமா? நீடிக்குமா?என்பதை எல்லாம் உடனே சொல்ல முடியாது. நான் அரசியலுக்கு புதியவன். இந்த ஆட்சியை பற்றி சொல்ல 6மாத அவகாசமாவது வேண்டும்.
மற்றவர்கள் போல் இந்த ஆட்சி நீடிக்காது என்று பேச நான் தயாராக இல்லை. என்ன செய்கிறார்கள் என்பதைபொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏழை விவசாய்களுக்கு 2 ஏக்கர் நிலம் வாங்கிய கொடுக்கும் திட்டத்தில்சந்தேகம் இருக்கிறது.
கூட்டுறவு கடன் போல மற்ற வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கட்சிகளிடையே ஒற்றுமை இருப்பதாக தெரியவில்லை.
5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இருந்ததால் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தார்கள். தேர்தல்முடிந்ததும் விலையை உயர்த்தி விட்டார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை. தமிழ்நாட்டில் விலை உயராமல்விற்பனை வரியை குறைக்கலாமே என்று ஏற்கனவே கருணாநிதி சொன்ன யோசனையை கூறினால், அதைஅவரே ஏற்க மறுக்கிறார்.
இப்போது மண்ணெண்ணை, கேஸ் விலையை உயர்த்தவில்லை. உள்ளாட்சி தேர்தல் வருவதால் இது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் இந்த விலையையும் உயர்த்தி விடுவார்கள். மக்களும்இதை புரிந்து கொள்வார்கள்.
நாங்கள் மக்களிடம் நம்பிக்கையை தோற்றுவித்திருகிறோம். இனி வெற்றி பெறும் அணியாக இருப்போம்.
உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. கட்சியை இன்னும் பலப்படுத்தும்முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகலாம் என்று கூட பேச்சு இருக்கிறது.எனவே தேர்தல் அறிவித்த பிறகு என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.
சினிமாவில் நடிக்கும் போது கதையை வெளியே சொல்லமாட்டேன். அதுபோல எங்கள் கட்சி தேர்தலைசந்திப்பது எப்படி என்பதை பற்றி வெளியே சொல்லமாட்டேன். எம்ஜிஅருக்குப் பிறகு யாருமே 2 அல்லது 3முறை தொடர்ந்து ஆட்சி நடத்தவில்லை.
காரணம் இவர்கள் சரியில்லை என்ற காரணமாக மக்கள் மாற்றி மாற்றி தேர்ந்தெடுகிறார்கள். எனவே மாற்றம் வரஎங்களுக்கும் வாய்ப்பு கேட்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications