கண்ணிவெடி: 3 இலங்கை போலீஸார் பலி
கொழும்பு:
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 3 போலீஸார் பலியாயினர்.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்வெடித்து, இரு தரப்பினரும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.இன்று வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே விடுதலைப்புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 3 போலீஸார் பலியாயினர். மேலும் பலர்காயமடைந்தனர்.
இதற்கிடையே, இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகளின் விமான தளம்சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராணுவம் நடத்திய தாக்குதலில் வன்னி காட்டுப்பகுதியில் உள்ள விடுதலைப்புலிகள் விமான தளம் பலத்த சேதம்அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ் செல்வன் இலங்கை அரசுக்கு கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,
அனுராதபுரம் பஸ் தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. சர்வதேச சமுதாயத்தில் எங்கள் மீது கெட்டபெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இலங்கை அரசே செய்த சதி இது. அமைதி முயற்சிகளை எதிர்க்கும்சக்திகள் இதன் பின்னணியில் உள்ளன.
அவர்கள் முழு யுத்தத்தை தூண்டியுள்ளனர். இப்போது பொதுமக்கள் மீது இலங்கை ராணுவம் விமானம் மூலம்குண்டு வீசி தாக்கி வருகிறது. பொறுப்பற்ற இந்த தாக்குதலை எங்களால் சகித்து கொண்டிருக்க முடியாது. இதற்குதக்க பதிலடி கொடுக்க வேண்டிய நிலை வரும் என எச்சரிக்கை செய்கிறோம்.
இது பற்றி போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் கூறிவிட்டாம். எங்கள் எச்சரிக்கையை இலங்கை அரசிடம்சொல்லும்படி அவர்களிடம் கேட்டு இருக்கிறோம். இலங்கையில் உள்ள உண்மை நிலை தெரியாமல் சிலநாடுகள்எங்கள் அமைப்பு மீது குறை கூறி இருக்கிறது. இது வருத்தம் அளிக்கிறது என அவர் கூறினார்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications