காங் பிரமுகருக்கு அடி-உதை: இளங்கோவன் மகன் மீது புகார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் தென்றல் மணியை, மத்திய அமைச்சர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஈ.வே.ரா. திருமகனும் அவரதுஆதரவாளர்களும் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

ஈரோட்டில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.இதில் இளங்கோவன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்தென்றல் மணி வந்தபோது அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

அந்தக் கும்பல் தென்றல் மணியை சரமாரியாக அடித்து உதைத்து காயப்படுத்திவிட்டுச் சென்றது. படுகாயமடைந்த தென்றல் மணி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் குறித்து தென்றல் மணி கூறுகையில்,

மத்திய அமைச்சர் இளங்கோவனின் மகன் திருமகன், ஈரோடு நகர தலைவர் சந்துரு,ராஜேஷ் உள்ளிட்ட 10 பேர் என்னைக் கடத்திக் கொண்டு சென்றனர். ஒரு இடத்தில்அடைத்து வைத்து அடி அடியென்று அடித்தார்கள்.

டாக்டர் செல்லக்குமாரின் (இவரது ஆதரவாளர்களைத்தான் வாசன் ஆதரவாளர்கள்சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைத்து விரட்டிவிரட்டி வெளுத்து வாங்கினார்கள்) ஆதரவாளரான உனக்கு மாவட்ட தலைவர் பதவிவேண்டுமா?

அதற்காக மயூரா ஜெயக்குமாரை வரவேற்க வந்தாயா என்று கேட்டு திருமகனும்அவரது ஆதரவாளர்களும் என்னை சரமாரியாகத் தாக்கினர்.

தாக்குதலில் எனது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. வலது பக்க கண்ணும் வீங்கிவிட்டது. நான் மயங்கி விட்டேன். பின்னர் ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பிமருத்துவமனையில் வந்து சேர்ந்தேன் என்று கூறியுள்ளார் தென்றல் மணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+