இலங்கை-கருணாநிதி இன்று முக்கிய ஆலோசனை
சென்னை:
இலங்கையில் போர் வெடிக்கும் சூழல் நிலவுவதையடுத்து அது குறித்து கூட்டணிக்கட்சிகளுடன் முதல்வர் கருணாநிதி இன்று அவசரமாக விவாதிக்கிறார்.
அப்பாவித் தமிழர்களைக் குறி வைத்து இலங்கை முப்படைகளும் தீவிர தாக்குதலில்இறங்கியுள்ளன.போர்ச் சூழல் உருவான நாள் முதலே ஆயிரக்கணக்கான தமிழர்கள்அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.இந் நிலையில், இலங்கை விவகாரத்தில் தமிழக அரசின் மெளனம் பல்வேறுசர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகளும் தமிழக அரசு தொடர்ந்துமெளனமாக இருப்பது குறித்து விமர்சித்து வருகிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலைக் கண்டித்து போராட்டங்களும்நடக்க ஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் பெங்களூர் சென்றிருந்த முதல்வர் கருணாநதி இன்று காலை சென்னைதிரும்பினார். வந்தவுடன், இன்று மாலை கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைகருணாநிதி கூட்டியுள்ளார்.
இதையடுத்து இன்று மாலை திமுக கூட்டணிக் கட்சிகளின் அவசரக் கூட்டத்துக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கையில் நிலவும் சூழல், அகதிகள்வருகை, மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்துவிவாதிக்கப்பட்டு, முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிகிறது.
நார்வே தீவிரம்:
இந் நிலையில் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த அந் நாட்டுக்கான நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர், இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர்உல்ப் ஹென்ரிக்சன் ஆகியோர் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க உள்ளனர்.
இதற்கிடையே இலங்கையில் போர் வெகு தூரத்தில் இல்லை என ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லியின் இலங்கை எழுத்தாளரும் பாதுகாப்பு நிபுணருமான இக்பால் அதாஸ்கூறியுள்ளார்.
வாயில் சுட்டு 4 தமிழர்கள் படுகொலை:
இதற்கிடையே இலங்கையின் பேசாலை பகுதியில் தமிழ் மீனவர்கள் நான்கு பேரைஅவர்களது வாயில் சுட்டு இலங்கை கடற்படையினர் கொன்ற தகவல் இப்போதுவெளியாகியுள்ளது.
2 நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவுக்கும்,கடற்படைக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. நடுக் கடலில் நடந்த இந்தமோதலில் இரு தரப்பிலும் சேர்த்து 42 பேர் பலியானார்கள்.
இரு தரப்பினரின் படகுகளும் மூழ்கடிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலால் ஆத்திரமுற்ற இலங்கை கடற்படையினர் விடுதலைப் புலிகள் மீதுகாட்ட முடியாத தங்களது கோபத்தை அப்பாவித் தமிழர்கள் மீது திருப்பினர்.
கடலோர பகுதியான பேசாலைக்கு கடற்படை வீரர்கள் விரைந்தனர். அங்கு தமிழர்கள்அதிக அளவில் வசிக்கின்றனர்.
பேசாலை மீனவர் குடியிருப்புகளில் புகுந்து சரமாரியாக சுட்டுத் தள்ளினர்.
இதில் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் காயமடைந்தனர். 40க்கும் மேற்பட்ட மீன் பிடிபடகுகளையும் தீவைத்துக் கொளுத்தினர். மீன் பிடி வலைகளையும் சேதப்படுத்தினர்.
மேலும், நான்கு தமிழ் மீனவர்களைப் பிடித்து அவர்களது வாயில் சுட்டு கொடூரமாகபடுகொலை செய்தனர். கடற்படை வீரர்களின் வெறித் தாக்குதலால் பீதியடைந்ததமிழர்கள் அங்குள்ள பேராலயத்தில் அடைக்கலம் புகுந்தனர்.
ஆனால் வெறி தணியாத கடற்படையினர் பேராலயத்திற்குள்ளும் தாக்குதல்நடத்தினர். 2 வெடிகுண்டுகளை உள்ளே வீசினர். இதில் ஒரு குண்டு வெடிக்கவில்லை.வெடித்த இன்னொரு குண்டுக்கு மானுவல் அம்மா லீமா என்ற மூதாட்டி பரிதாபமாகஇறந்தார்.
மன்னார் மாவட்ட கூடுதல் ஆட்சித் தலைவர் பிரபாகரன் அங்கு வந்துகடற்படையினரை தடுத்து நிறுத்திய பிறகே வெறி தணிந்து அவர்கள் வெளியேறினர்.இத்தகவல்களை பேசாலை பகுதி பேராலய பேராயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார்.
30 புலிகள் பலியில்லை..:
இதற்கிடையே கடலில் நடந்த சண்டையில் 30 விடுதலைப் புலிகள் பலியானதாகஇலங்கை ராணுவமும் அரசும் புரளி கிளப்பி விட்டுள்ளதாக புலிகள் தரப்பில்கூறப்பட்டுள்ளது. இந்த சண்டையில் 2 புலிகள் காயம் மட்டுமே அடைந்துள்ளதாகவும்புலிகள் கூறியுள்ளனர்.
தமிழக அரசு தலையிட புத்த பிக்குகள் கோரிக்கை:
இந் நிலையில் இலங்கைப் பிரச்சினையில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டுசுமூகத் தீர்வு ஏற்பட உதவ வேண்டும் என்று இலங்கை மஹா போதி அமைப்பைச்சேர்ந்த பிக்குகள் விடுத்துள்ளனர்.
இலங்கை இனப் பிரச்சினையில் தமிழக அரசும், இந்திய அரசும் மெளனம் சாதித்துவருகின்றன.
இந் நிலையில் தமிழக அரசுக்குத்தான் இலங்கைப் பிரச்சினையில் அதிக பங்குஉள்ளது என்று இலங்கையைச் சேர்ந்த மஹா போதி சங்கம் என்ற புத்த பிக்குகள்அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தமிழக பொருப்பாளர் ரத்னஜோதி கூறுகையில், இலங்கையில்தற்போது நடக்கும் நிகழ்வுகள் கவலை தருவதாக உள்ளன. அமைதிக்கு அங்குமீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு இனியும் இலங்கை பிரச்சினையில் அமைதி காக்கக் கூடாது.இப்பிரச்சினையில் மற்றவர்களை விட தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும்தான் அதிகபங்கு உள்ளது. இலங்கையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டு தமிழர்களும், சிங்களர்களும்அமைதியாக, இணக்கமாக வாழ தமிழக அரசு உதவ வேண்டும்.
பூகோள ரீதியிலும், சரித்திர ரீதியிலும் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நெருங்கியஉறவும், தொடர்பும் உள்ளது. இலங்கைப் பிரச்சினையில் சுக தீர்வு ஏற்பட புத்தபிக்குகள் இடையூறாக இருப்பதாக கூறுவது தவறு. ஒரு சில பிக்குகள் அவ்வாறுஇருக்கலாம். ஆனால் பெரும்பாலான புத்த சாமியார்கள், அமைதியான தீர்வுஏற்படுவதையே விரும்புகிறார்கள், அதற்காக பிரார்த்தனையும் செய்து வருகிறார்கள்என்றார் ரத்னஜோதி.
போர் மூண்டால்.. புலிகள் எச்சரிக்கை:
இந் நிலையில் தமிழ் மக்கள் மீது சிங்கள் அரசு மீண்டும் போரைத் திணித்தால் எந்த வகையான தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என புலிகளின்அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் அவர் அளித்துள்ள நேர்காணலில்,
போர் மூண்டால் அதை நாடு முழுவதும் பிரதிபலிக்கும் வகையில் எங்கள் பதில் தாக்குதல் இருக்கும். எங்கள் தாக்குதல் எந்த வகையில்வேண்டுமானாலும் இருக்கும், தற்கொலைத் தாக்குதல்கள் உள்பட என்று கூறியுள்ளார்.
விமான தாக்குதல் நிறுத்தம்:
இதற்கிடையே தமிழர் பகுதிகளில் விமானப் படை குண்டு வீசுவதை நிறுத்தியுள்ளது.
விமான குண்டு வீச்சு தொடர்ந்தால், கடும் விளைவுகள் ஏற்படும் என புலிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று 2கிபிர் ரக போர் விமானங்கள் தமிழர் பகுதிகள் மீது பறந்தன. ஆனால், குண்டு ஏதும் வீசவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications