எஸ்.சி.வி. மீது அதிமுக-மதிமுக கூட்டாக புகார்
கோவை:
கோவை மாவட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனுக்குச்சொந்தமான தமிழ்த்தாய் கேபிள் டிவி நிறுவனத்தை குறி வைத்து சன் டிவி குழுமநிறுவனமான எஸ்.சி.வி. நறுவனம் செயல்படுவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் அதிமுக மற்றும்மதிமுக எம்.எல்.ஏக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தமிழ்த்தாய் விஷன் என்ற கேபிள் டிவி நிறுவனம்நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனுக்குச்சொந்தமானது இந்த நிறுவனம்.தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில், தமிழ்த்தாய் நிறுவனத்தின் கேபிள் வயர்களைஎஸ்.சி.வி. நிறுவன ஊழியர்கள் போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகளின் உதவியுடன் அறுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்த்தாய் கேபிள் டிவி நிறுவன ஊழியர்கள் மாநகர காவல்துறைஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சமீபத்தில் புகார்கொடுத்தனர்.
இந்த நிலையில் மதிமுக சட்டசபைத் தலைவர் கண்ணப்பன் தலைமையில் அதிமுகமற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல், மாவட்டக்கண்காணிப்பாளர் கரண் சின்ஹா ஆகியோரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அதில், எஸ்.சி.வி. நிறுவனத்தின் போக்கைத் தடுக்க வேண்டும், அவர்களால்தமிழ்த்தாய் நிறுவன ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, அவர்களுக்குபாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications