கப்பல் அனுப்பி அகதிகளை அழைத்து வர விஜயகாந்த் கோரிக்கை
சென்னை:
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் தமிழர்களை பாதுகாப்பாகஅழைத்து வர இலங்கைக்கு கப்பல்களை அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ளநெருக்கடி காரணமாக அங்குள்ள தமிழ் மக்கள் உயிர் தப்பிக்க இந்தியாவுக்குஅகதிகளாக வரத் தொடங்கியுள்ளனர்.வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பிழைப்பு தேடி ஏராளமானோர் இன்னும் வந்துகொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் தரை மூலமாக வருவதால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கோ, உயிர் பிழைக்க வேண்டும் என்றாலும் கடலைக்கடந்துதான் வர வேண்டிய கட்டாய நிலை உள்ளது.
அவர்கள் அரசுக்குத் தெரியாமல் படகுகள் மூலம் வருவது, அது இரண்டுஅரசுகளாலும் தடுக்கப்படுவதும், பாதி வழியிலேயே அவர்கள் கடலில் விழுந்துசாவதுமான துர்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
1958ம் ஆண்டு சிங்கள மொழிக் கலவரத்தின்போது அன்றைய பிரதமர் நேரு, இந்தியகப்பலை அனுப்பி கொழும்பிலிருந்து தமிழ் மக்களை மீட்டு யாழ்ப்பாணத்திற்குப்பாதுகாப்பாக கொண்டு சேர்க்க உதவினார்.
1983ல் சிங்களர்களால் தமிழின படுகொலை நடந்தபோது இந்திய அரசு கப்பல்கள்மூலம் அகதிகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் இலங்கைக்கு திருப்பிஅனுப்பி வைக்கப்பட்டனர்.
அத்தகைய உயிர் காக்கும் பணியில் இந்திய அரசு தமிழ் அகதிகளை பாதுகாப்பாகஇந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவித்தாய்மார்களையும், குழந்தைகளையும் நடுக்கடலில் மூழ்கடிக்கும் மனிதாபிமானமற்றசெயலுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை போகக் கூடாது.
இந்திய அரசு மேற்கூறிய நடவடிக்கைகளை மனிதாபிமான அடிப்படையில், விரைந்துஎடுக்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இல்லையெனில் ஆதரவற்ற இலங்கைத் தமிழர்களைக் காக்க தேசிய முற்போக்குதிராவிட கழகம் ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியஅரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
சிங்கள வெறியாட்டம்: பாஜக கண்டனம்
இதற்கிடையே இலங்கையில் ராணுவமும், கடற்படையும் தமிழர் பகுதிகளில்வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதற்கு தமிழக பாஜக பொதுச் செயலாளர்எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், பெரும் தாக்குதலுக்குஆளாகியுள்ளனர். ஆனால் இந்திய அரசும், தமிழக அரசும் இதை அமைதியாகவேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
உலகத் தமிழர்களின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி,இலங்கைத் தமிழர்கள் படும் அவதியைக் கண்டு மெளனமாக இருப்பது ஏன் என்றுபுரியவில்லை.
உடனடியாக மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு இலங்கையில் நடந்து வரும்இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும்.
அகதிகளாக வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களை பாதுகாப்பாகதமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழகஅரசும், மத்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொருதமிழரின் எதிர்பார்ப்பும் என்று கூறியுள்ளார் ராஜா.












Click it and Unblock the Notifications