காவிரி நடுவர் மன்றத்தின் பாரபட்சம்!
சென்னை:
கர்நாடகத்திற்கு ஆதரவாக காவிரி நடுவர் மன்ற ஆய்வறிக்கையில் பல பரிந்துரைகள்சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் நடுவர் மன்ற நிபுணர் குழு தயாரித்துள்ளஆய்வறிக்கையின் நகல் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுவை ஆகிய மாநிலஅரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநலங்கள் தங்களது கருத்துக்களை நடுவர்மன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு தற்போது தமிழக அரசின் சார்பில் பதில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், கர்நாடக அரசுக்கு சாதகமாக நடுவர் மன்ற நிபுணர்குழுவின் ஆய்வறிக்கை அமைந்துள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்தில் 2வது பருவ சாகுபடியை நிபுணர் குழு நிராகரித்துள்ளது. அதேசமயம்,கர்நாடகத்தில் கபிணி, ஹோரங்கி, ஹேமாவதி ஆகிய பகுதிகளில் நீர் பாசனத்திற்குஅனுமதி தரப்பட்டுள்ளது பாரபட்சமான நடவடிக்கை.
தமிழகத்தில் 4 லட்சம் ஏக்கர் பாசன பகுதி உள்ள நிலையில் அதை வெறும் 90,000ஆக நிபுணர் குழு குறைத்துக் கூறியுள்ளது நியாயமற்றது.
கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழகத்தில் 1.37 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெற்று வருகிறது. ஆனால் இதை பயனீட்டுத் திட்டத்தில் சேர்க்க நிபுணர் குழுமறுத்துள்ளது.
அதேசமயம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெறும் திட்ட அளவில் மட்டுமே உள்ளபகுதிகளை பரிந்துரையில் சேர்த்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழகஅரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications