கள்ள நோட்டு: முன் ஜாமீன் கோரும் ஜனனி!
மதுரை:
கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்டு வரும் நடராஜனின் தோழி ஜனனி மற்றும்அவரது தாயார் ரமீஜா ஆகிய இருவரும் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரிமதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கஞ்சா கடத்தல் வழக்கிலிருந்து தப்பித்த ஜனனி, இப்போது கள்ள நோட்டு வழக்கில்சிக்கியுள்ளார். ஜனனியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1 கோடியே 40 லட்சத்து18,000 ரூபாய் பணத்தில் ரூ. 10 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டு இருந்ததாகவருமான வரித்துறை தெரிவித்துள்ளது.இதன் அடிப்படையில் ஜேனனி, ரமீஜா ஆகியோர் மீது மதுரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைது செய்யவும் தேடி வருகிறார்கள். ஆனால்,இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜனனி, ரமீஜா ஆகியோரின்சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
ரிசர்வ் வங்கி அதிர்ச்சி:
இதற்கிடையே ஜனனியிடம் இருந்த கள்ள நோட்டுகள், ரிசர்வ் வங்கி அச்சிட வைத்திருந்த வரிசை எண்கள் கொண்டவை என ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில்தெரிய வந்துள்ளது.
ரிசர்வ் வங்கி அச்சிட வைத்திருந்த வரிசை எண்களை முன்கூட்டியே தெரிந்துக் கொண்டு இந்த நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதனால் ரிசர்வ் வங்கியும்,வருமான வரித்துறையும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
முன்னதாக ஜனனியின் வீட்டில் போலீசார் கைப்பற்றிய பணத்துக்கு கணக்கு இல்லாததால் அதை தங்களிடம் ஒப்படைக் கோரியது வருமான வரித்துறை.ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.
இந் நிலையில் நோட்டுக்களில் அச்சிடப்பட்டிந்த வரிசை எண் விபரங்களை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருமான வரித்துறை வாங்கியது.
இந்த எண் விபரங்களை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியது. இந்த எண்களை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த ரூபாய் நோட்டுக்கள்2003ம் ஆண்டு செரீனாவிடம் இருந்து கைப்பற்றபட்டன. ஆனால் அவற்றில் இருந்த எண்கள் 2004ம் ஆண்டு மும்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டநோட்டுக்ளின் எண்களாக இருந்தன.
இந்த விபரங்களை வரிமான வரித்துறைக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியது. இந்த விபரங்களின் அடிப்படையில் தான் கைப்பற்றப்பட்டதில் ரூ. 30 லட்சம் அளவுக்குகள்ள நோட்டுக்களாக இருக்கலாம் என்பது தெரிய வந்தது.
ரிசர்வ் வங்கியில் ஓராண்டுக்கு பின் அச்சடிக்க இருந்த ரூபாய் நோட்டுக்களின் எண்கள் கள்ள நோட்டு கும்பலுக்கு எப்படி தெரிந்தது என்ற கேள்விஎழுந்துள்ளது. மேலும் ஜனனியிடம் கைப்பற்றபட்ட பணத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள் உயர் தொழில் நுட்பத்துடன், அசல் நல்ல நோட்டுக்களைப்போலவே அச்சிடப்பட்டுள்ளன.
இதனால் வெளிநாட்டில் இருந்து கள்ள நோட்டை அச்சடித்து இந்தியா கொண்டு வந்திருக்கலாம் அல்லது ரிசர்வ் வங்கியின் தொழில் நுட்பத்தை அப்படியேகையாளும் அளவிற்கு தொழில் நுட்பம் தெரிந்த கும்பல் இதன் பின்னணியில் செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எற்பட்டுள்ளது.
இதனால் ஜனனி கள்ள நோட்டு பிரச்னை மேலும் சிக்கலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications