மதானி உடல்நிலை-அரசிடம் டாக்டர்கள் அறிக்கை
கோவை:
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானியின் உடல் நலம்குறித்த அறிக்கையை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர்கலாநிதி, மருத்துவக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருப்பவர் மதானி. கோவை தொடர்வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்படும் மதானியை விடுவிக்க கேரள அரசுதொடர்ந்து தமிழக அரசைக் கோரி வருகிறது.சமீபத்தில் சென்னை வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், தமிழக முதல்வர்கருணாநிதியிடம் மதானியை ஜாமீனில் விடுவிக்க உதவ வேண்டும். அவருக்கு சிறந்தசிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை அல்லது மத்தியசிறையில் மதானிக்கு சிகிச்சை தர முடியுமா என்பது குறித்த விவரங்களைத் தருமாறுகோவை சிறை நிர்வாகத்தை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
மேலும், மதானியின் உடல் நிலையை ஆராய மருத்துவக் குழுவும்சென்னையிலிருந்து கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னையிலிருந்து சென்ற நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு, கோவை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவுடன் இணைந்து மதானியைபரிசோதித்தது.
இந்தப் பரிசோதனையின் முடிவுகள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்விஇயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரிடீன் டாக்டர் கலாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
கோவை அரசு மருத்துவனையைச் சேர்ந்த சர்க்கரை வியாதி நிபுணர், நரம்பியல்நிபுணர், இதயவியல் நிபுணர் மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர் ஆகியோர் மற்றும்சென்னை மருத்துவர்களை உள்ளடக்கிய குழு மதானியிடம் தனது பரிசோதனையைமுடித்து விட்டது.
2 மணி நேரம் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்திய மருத்துவநிபுணர் குழு என்னிடம் சோதனை முடிவுகளைக் கொடுத்துள்ளனர். நான் அதைசென்னைக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
இந்த விஷயம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கேற்பநாங்கள் செயல்படுவோம். கோவை அரசு மருத்துவமனையில் மதானிக்கு சிகிச்சைஅளிக்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும்.
அதேபோல சிறைக்குள்ளேயே அவருக்கு சிகிச்சை தருவதா என்பதையும் தமிழகஅரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் கலாநிதி.
கடந்த 1998ம் ஆண்டு மதானி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன்கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள 165 கைதிகளும்அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதானி கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதலே செயற்கைக் காலுடன்தான்நடமாடி வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications