ஸ்டாலின்-போலீஸ் பக்கமே திரும்பும் சந்தேகம்
மதுரை:
உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினை மதுரை ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தமுயன்ற சம்பவத்தில், காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றசந்தேகம் மதுரை போலீஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளதாம்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தொண்டர் கூட்டத்தையும் மீறி கத்தியால் குத்தவந்த நபர் தப்பித்த்தது எப்படி என்று இப்போது பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.சம்பவம் நடந்த அன்று ரயில் நிலையமே திக்குக்காடிப் போகும் அளவுக்கு திகவினர்பெரும் திரளாக கூடியிருந்தனர். வருங்கால முதல்வர் என்ற எதிர்பார்ப்பு திமுகவினர்மத்தியில் இருப்பதால் ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் வரவேற்பு கொடுத்து அசத்தினர்மதுரை உடன்பிறப்புகள்.
வரவேற்பில் ஸ்டாலினே கசங்கிப் போய் விட்டார். அந்த அளவுக்கு ருெக்கி அடித்தகூட்டத்தினர் மத்தியில் ஒரே ஒரு நபர் மட்டும் ஸ்டாலினை நோக்கி கண்ணும்கருத்துமாக நகர்ந்துள்ளார்.
சட்டைப் பையில் வைத்திருந்த கத்தியைக் கையில் எடுத்த அவர் ஸ்டாலினைக் குத்தமுயன்றதை பார்த்து விட்ட மத்திய போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்சுரேஷ்குமார் பாண்டே நைப், நைப் என்று கத்தியுள்ளார் (அவருக்குத் தமிழ்தெரியாதாம்).
ஆனால் திமுகவினர் போட்ட வாழ்த்து கோஷத்தில் பாண்டேவின் குரல் யாருக்கும்எட்டாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபரை நோக்கி நகர்ந்தபாண்டே, அவரது கையில் இருந்த கத்தியைப் பிடுங்க முயன்றார். இதையடுத்து அந்தமர்ம நபர் கத்தியை விட்டு விட்டு அங்கிருந்து நழுவி விட்டார்.
கத்தியைப் பறித்தபோது கையில் சொட்டிய ரத்தத்தோடு போலீஸ்காரர் பாண்டேரயில்வே காவல் நிலைய வாசலுக்கு வந்து நடந்ததைக் கூறியுள்ளார். ஆனால்அதற்குள் ஸ்டாலின் வரவேற்பை முடித்து விட்டு கிளம்பிச் சென்று விட்டார்.
இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும் யாரும் பார்க்கவில்லையா என்று மதுரைபோலீஸார் சந்தேகப்படுகின்றனர். ஆனால் ஸ்டாலின் வரவேற்பில் கலந்து கொண்டஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி இந்த சம்பவத்தை நேரில் பார்த்துள்ளதாககூறுகிறார்கள்.
கத்தியுடன் வந்த நபரைப் பிடிக்க சுரேஷ்குமார் பாண்டே போராடியதை தமிழரசிபார்த்துள்ளார். ஸ்டாலின் ரயில் நிலையத்தை விட்டுக் கிளம்பி காரில் ஏறியபோதுஅவரிடம் இதுகுறித்துக் கூறினாராம் தமிழரசி.
இந்த சம்பவத்தில் ஒரு துப்பும் கிட்டாத நிலையில் பல்வேறு கோணங்களில் மதுரைபோலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில், ஸ்டாலினைக் கொல்ல முயற்சி நடப்பதாக ஒரு செய்திகிளம்பியது. சில காவல்துறை அதிகாரிகளே ஸ்டாலினைக் கொல்லதிட்டமிட்டுள்ளதாக செய்திகள் கிளம்பின. ஆனால் அதை அப்போதைய அரசுமறுத்தது.
ஆட்சி மாறியும் தங்களது திட்டத்தை மாற்றிக் கொள்ளாத சில காவல்துறைஅதிகாரிகளே இதை அரங்கேற்றியிருக்கலாம் என்ற சந்தேகமும் மதுரைபோலீஸாரிடம் உள்ளது. இதனால் அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறதாம்.


Click it and Unblock the Notifications
