சங்கரராமன் வழக்கு-தில் பாண்டியனுக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான தில்பாண்டியனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சங்ககராமனைக் கொலை செய்தது நான்தான் என்று கூறி 2004ம் ஆண்டு அக்டோபர்27ம் தேதி சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தவர் தில் பாண்டியன்.ஆனால் போலீஸ் விசாரணையில் இவர் போலி குற்றவாளி என்று தெரிய வந்தது.

அவரிடம் விசாரணை நடத்தி தான் கதிரவன், அப்பு உள்ளிட்டோரை போலீசார்பிடித்தனர்.

போலி குற்றவாளியான தில் பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரிதில் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், எனக்கும், சங்கரராமன் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.சங்கரராமனைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் குறித்தும் எனக்கு எதுவும்தெரியாது.

என்னுடன் சேர்ந்து போலியாக சரணடைந்த மற்ற 4 பேரும் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டு விட்டனர். நான் மட்டுமே சிறையில் வாடி வருகிறேன் என்றுகூறப்பட்டுள்ளது.

பாண்டியனின் சார்பில் வழக்கறிஞர் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். இதை ஏற்றநீதிபதி கே.என்.பாஷா, தில் பாண்டியனை நிபந்தனை ஜாமீனில் விடுவித்தார்.

அதன்படி ரூ. 25,000 ரொக்க ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு தலா 2 பேர் கொண்டபிணை, இவர்களில் ஒருவர் அரசு ஊழியராக இருக்க வேண்டும். சங்கரராமன்கொலை வழக்கு விசாரணை நடக்கும்போதெல்லாம் அதில் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார் நீதிபதி.

அப்பு ஜாமீன் மனு: 27ல் விசாரணை

இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியுள்ள கூலிப் படைத் தலைவன்அப்புவின் ஜாமீன் மனு மீதான இறுதி விசாரணை வரும் 27ம் தேதி நடைபெறும் எனஉச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அப்பு சேர்க்கப்பட்டுள்ளார்.சங்கரராமனைக் கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்புதாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்துஉச்சநீதிமன்றத்தில் அப்பு மேல் முறையீடு செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு மீது 27ம் தேதி இறுதி விசாரணைநடைபெறும் என அறிவித்தனர். அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+