தூத்துக்குடி: ஜெ-கருணாநிதி போட்டோ சண்டை
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகராட்சியில் அகற்றப்பட்ட ஜெயலலிதா படத்தை மீண்டும் வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினர்பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனைபோலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நகராட்சி அதிமுக வசம் உள்ளது. இங்கு முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்ஜெயலலிதாவின் படத்தை அகற்றிய திமுக கவுன்சிலர்கள் அந்த இடத்தில் முதல்வர்கருணாநிதியின் படத்தை வைத்தனர்.
![]() |
| கைது செய்யப்பட்டு வேனில் அழைத்துச் செல்லப்பட்ட அனிதா |
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் நகராட்சித் தலைவர்டேணியல்ராஜ் தலைமையில் திரண்டு வந்த அதிமுகவினர் கருணாநிதி படத்துக்குஅருகே ஜெயலலிதா படத்தை வைத்தனர். இதனால் அங்கு டென்ஷன் நிலவியது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கனகராஜ் போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர்ஜெயலலிதா படத்தை அங்கிருந்து அகற்றுமாறு நகராட்சி ஊழியர்களுக்கு கனகராஜ்உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா படம் அகற்றப்பட்டு ஆணையர் அறையில்வைக்கப்பட்டது.
இதுகுறித்துக் கேள்விப்பட்ட நகராட்சித் தலைவர் பொறுப்பு வகிக்கும் அதிமுகவைச்சேர்ந்த மனோஜ்குமார் ஆணையர் அறைக்குள் நுழைந்து எப்படி அம்மா படத்தைஎடுக்கலாம்? நான் நிகராட்சியின் தலைவர் பதவியை வகிக்கிறேன். என்னிடம்கேட்காமல் எப்படி எடுக்கலாம் என்று வாக்குவாதம் செய்தார்.
அதிமுக கவுன்சிலர்களும், அதிமுகவினரும் ஆணையர் அறைக்குள் புகுந்தநிலையில், டேணியல்ராஜும் அங்கு வந்து ஆணையருடன் வாக்குவாதம் செய்தார்.அப்போது ஆணையர் கனகராஜ், நகராட்சித் தலைவர் அறைக்குச் செல்லும் வழியில்எந்தப் படமும் வைக்க அனுமதி இல்லை என்றார்.
இதைக் கேட்ட டேணியல்ராஜ், அப்படியானால் அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதிபடத்தையும் அகற்றுங்கள் என்றார். இல்லாவிட்டால் ஜெயலலிதாவின் படத்தையும்மாட்ட வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வந்து ரகளையில்ஈடுபட்ட 12 அதிமுகவினரைக் கைது செய்தனர். இந்தத் தகவல் அறிந்ததும் முன்னாள்அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு வந்தார்.
அவருடன் ஏராளமான அதிமுகவினரும் வந்தனர். ஆணையர் அலுவலகத்திற்கு வந்தஅவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் குதித்தனர். அனிதாராதாகிருஷ்ணன் ஒரு ஜெயலலிதா படத்தை எடுத்து வந்து சர்ச்சைக்குரிய இடத்தில்மாட்ட முயன்றார்.
அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஜெயலலிதாவின் படம் கீழேவிழுந்து கண்ணாடி உடைந்தது.பின்னர் இன்னொரு படத்தை எடுத்து வந்து மாட்ட முயற்சித்தனர். அப்போதுகாங்கிரஸ் கவுன்சிலர்கள் காமராஜர் படத்துடன் அங்கு வந்து இதையும் மாட்டவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 57 பேரைக் கைதுசெய்தனர். இவர்களில் 9 பேர் பெண் கவுன்சிலர்கள்.
இந் நிலையில் காமராஜர் படத்துடன் ஒற்றைக் காலில் நின்ற காங்கிரஸ் கட்சியினர்ஜெயலலிதா படத்தை மாட்டக் கூடாது. அப்படி மாட்டினால் காமராஜர், பக்தவச்சலம்ஆகியோரின் படங்களையும் அங்கு மாட்ட வேண்டும் என்றனர்.
ஆனால் போலீஸார், ஜெயலலிதா படத்தை மாட்ட விட மாட்டோம் என்றுஉறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.













Click it and Unblock the Notifications