ஓடும் பஸ்சில் 1 ரூபாய் காயின் போன்!
திண்டுக்கல்:
திண்டுக்கல் மினி பேருந்துகளில் ஒரு ரூபாய் காயின் தொலைபேசியைஅறிமுகப்படுத்தியுள்ளனர். பயணிகளிடையே இதற்கு செமையான வரவேற்புகிடைத்துள்ளது.
![]() |
தற்போது வெளியூர்களுக்கும் அதாவது எஸ்.டி.டி. கால்களையும் இந்த ஒரு ரூபாய்போன் மூலம் பேச வசதி செய்யப்பட்டுள்ளதால் இந்த போன்களுக்கு பொதுமக்களிடையே மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது இந்த ஒரு ரூபாய் போன் புதிய அவதாரம் எடுத்துள்ளது. பேருந்துகளிலும்இந்த போன் பொட்டியை தொங்க விட்டு விட்டனர்.
திண்டுக்கல்லில் உள்ள மினி பேருந்துகளில் ஒரு ரூபாய் போன்பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு பயணிகளிடையே நில்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் பேருந்துகளில் முதல் கட்டமாகஇதை அமல்படுத்தியுள்ளனர். வழக்கமாக வைக்கப்படும் ஒரு ரூபாய் போன் மெஷின்போல தோற்றமளித்தாலும் இது பிக்சட் வயர்லஸ் போன் ஆகும்.
இதற்கென ஒரு ஆண்டெனாவும் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவர் இருக்கைக்குப் பின்புறம் இந்த போன் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு வசதி. பஸ் எந்த ஊரில் சென்று கொண்டிருக்கிறதோ, அந்த ஊரில்உள்ள தொலைபேசிகளுக்கு லோக்கல் காலில் பேச முடிகிறது.
எட்வின் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த பஸ் தொலைபேசிஇயந்திரத்தை வடிவமைத்து பொருத்தியுள்ளது. இந் நிறுவனத்தின் சாக்ரடீஸ்இதுகுறித்துக் கூறுகையில்,
இந்தத் தொலைபேசி மூலம் ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் பேச முடியும்.சோதனை அடிப்படையில் இப்போது திண்டுக்கல்லுக்கும், ஒட்டன் சத்திரத்திற்கும்இடையே இயங்கும் பேருந்துகளில் அமல்படுத்தியுள்லோம்.விரைவில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதற்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றார்.
பஸ் ஓட்டுனர் சோனை முத்து இந்த நடமாடும் போன் குறித்துக் கூறுகையில்,பயணிகளுக்கு இது ரொம்ப வசதியாக இருக்குங்க. பஸ் கிளம்பி விட்டதா, எங்குவந்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் போன் பேட்டு வீட்டுக்கு சொல்லிக்கொள்கிறார்கள் என்றார்.
பயணி ஒருவர் கூறுகையில்,போன் பேசப் போய் பஸ்சை விட்டு விடுவோமா என்றடென்ஷன் எல்லாம் இனிமேல் இல்லை. ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் பேசலாம்என்ற வசதியும் இதில் இருப்பதால் நிம்மதியாகவும், செளகரியமாகவும் பயணிக்கமுடிகிறது என்றார்.
இந்த போன் மூலம் தமிழகத்திற்குள் நிமிடத்திற்கு 60 பைசாவிலும், மாநிலத்திற்குவெளியே உள்ள போன்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா செலவிலும் தொடர்புகொள்ள முடியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications