எம்பிபிஎஸ்: ரேங்க் பட்டியல்-நீதிமன்றம் அனுமதி
சென்னை:
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான ரேங்க்பட்டியலை வெளியிடவும், கவுன்சிலிங் நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம்அனுமதி அளித்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த மாணவர் மைக்கேல் என்பவர்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை பிளஸ்டூ மதிப்பெண்கள்அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வுமதிப்பெண்களை இதில் சேர்க்கக் கூடாது என்று கோரியிருந்தார்.
மேலும் நுழைவுத் தேர்வின் ரேங்க் பட்டியலை வெளியிடவும், கவுன்சிலிங் நடத்தவும்தடை விதிக்கக் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் முன்விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பைஅடுத்த மாதம் 4ம் தேதிக்கு நீதிபதிகள்ஒத்திவைத்தனர்.
அதேசமயம், ரேங்க் பட்டியலை வெளியிடத் தடை விதிக்க முடியாது எனவும் 26ம்தேதி முதல் கவுன்சிலிங்கை நடத்திக் கொள்ளவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
மேலும், பிளஸ்டூ மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை இணைத்து ஒரு ரேங்க்பட்டியலைத் தயாரிக்கவும், பிளஸ்டூ மதிப்பெண்களை மட்டும் வைத்து இன்னொருரேங்க் பட்டியல் தயாரிக்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த ரேங்க் பட்டியல்களை வருகிற 26ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவின் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் திட்டமிட்டபடி26ம் தேதி முதல் தொடங்க வழி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications