அதிமுக மணல் கொள்ளை-ராமதாஸ் கோரிக்கை
திண்டிவனம்:
சட்டசபையில் பாமக எம்.எல்.ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுகுறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் பயிற்சி அளித்தார்.
திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் பண்ணைஇல்லத்தில், பாமக எம்.எல்.ஏக்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.இதில் பாமக எம்.எல்.ஏக்கள் 18 பேரும் கலந்து கொண்டனர்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் பாமக எம்.எல்.ஏக்கள் எப்படிச் செயல்பட வேண்டும்,விவாதங்களில் பங்கேற்றுப் பேசுவது எப்படி என்பது குறித்து நிறுவனர் ராமதாஸ்,பாமக தலைவர் ஜி.கே.மணி, புதுவை பாமக எம்.பி ராமதாஸ் ஆகியோர்எம்.எல்.ஏக்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், மணல் குவாரி கொள்ளை குறித்து ஆதாரத்துடன்,அரசுக்கு எந்த வழியில் எல்லாம் நஷ்டம் ஏற்படுகிறது என்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் நமது எம்.எல்.ஏக்கள் வாதத்தை எடுத்து வைக்க வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில்செயல்பட வேண்டும். தங்களது தொகுதியில் எங்காவது கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகதெரிய வந்தால் உடனடியாக அதை காவல்துறை மற்றும் அரசின் கவனத்திற்குக்கொண்டு செல்ல வேண்டும்.
தொகுதிக்கு அடிக்கடி போக வேண்டும். மக்களுடன் நல்ல தொடர்பு வைத்திருக்கவேண்டும். அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து தொகுதி பிரச்சினைகள் தொடர்பாகவிவாதிக்க வேண்டும்.
சட்டசபையில் நடைபெறும் அனைத்து விவாதங்களிலும் தவறாமல் பங்கேற்கவேண்டும் என்று ராமதாஸ் அறிவுரை வழங்கினார்.
மணல் கொள்ளை: விசாரணை வேண்டும்
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அதிமுக ஆட்சியில் ஆசிரியர்பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்துவிசாரிக்க உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்தக் குழுஅளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2001-06 வரையிலான அதிமுக ஆட்சியில் அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியைவிட அதிக அளவில் ஊழல் நடந்துள்ளது. ஆனால் இவை எல்லாம் மறைக்கப்பட்டுவிட்டன. குடிநீர் வழங்கல், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, வீட்டு வசதி,நகர்ப்புற வளர்ச்சித் துறை என பல துறைகளில் டெண்டர் விடப்பட்டதில் தவறுநடந்துள்ளன. அதுகுறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும்.
கடந்த 10.5.2006 அன்றும் 11.5.2006 அன்றும் இரண்டு சர்ச்சைக்குரிய அரசுஉத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வாயிலாகபிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவுகளின் பின்னணி குறித்து விசாரணை நடத்தவேண்டும்.
அதேபோல கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரிகளை அரசே எடுத்துக்கொண்டது. ஆனால் ஆளுங்கட்சியினர் தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையில்ஈடுபட்டனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி யாரெல்லாம் இதன் மூலம்ஆதாயம் அடைந்தார்கள் என்ற உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications