நில மோசடி- 6 ஸ்டெர்லிங் அலுவலர்கள் கைது
சென்னை:
நில மோசடி வழக்கில் தொழில் அதிபர் சிவசங்கரனின் ஸ்டெர்லிங் நிறுவத்தைச் சேர்ந்த அலுவலர்கள் 6 பேர்கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக ஈரோடு ஏ.என் சண்முகம் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சண்முகம் தந்த புகாரில்,
சென்னை அய்யப்பன் தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள் கட்டி விற்கும் திட்டத்தைசெயல்படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார்.
என் நிலத்தின் அருகே நிலம் வைத்துள்ள 17 பேரிடமும் இதேபோல் கூறினார். இதன்பின் அவர் வீடுகள் கட்டசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) அனுமதி பெற வேண்டும் அதற்காக திறந்த வெளி நிலம்ஒதுக்க சிஎம்டிஏவுக்கு நிலம் தானமாக கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே நீங்கள் அனைவரும் நிலங்களின் மீது எனக்கு பவர் தந்தால் நானே தானப்பத்திரம் கொடுத்து விடுகிறேன்என்றார். அதை நம்பி சிவசங்கரனுக்கு நாங்கள் பவர் கொடுத்தோம்.
நான் 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் கொடுத்தேன். இதன்பின், இத்திட்டம் தாமதமானதால், அந்த நிலத்தை என்மகன் செந்திலுக்கு மாற்றிக்கொடுக்க முடிவு செய்தேன்.
அதற்காக கடந்த மார்ச் 17ம் தேதி அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால் மார்ச் 13ம்தேதியே அந்த நிலத்தை சிவசங்கர் தனது நிறுவனத்துக்கு நான் விற்பனை செய்து விட்டதாக போலிஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்துவிட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் புகாரில் சண்முகம் கூறியிருந்தார்.
இது பற்றி விசாரிக்க துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த போலீசார் ஸ்டெர்லிங்நிறுவன அலுவலர்கள் வாசுதேவன் (46), ரத்தினக்குமார் (43), சிவக்குமார் (50), கருணாகரன் (39), சக்கரவர்த்தி(43) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications