பிரபல பெண் ஜோதிடர் மகனுடன் தற்கொலை-புட்டபர்த்தி ஆசிரமத்துக்கு சொத்துக்கள்
சேலம்:
மருமகளின் தற்கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியை வந்த சேலத்தைச் சேர்ந்த பிரபல பெண்ஜோதிடர், மகனுடன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சேலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (55) பிரபலமான பெண் ஜோதிடர். வாஸ்து நிபுணராகவும் இருந்தார். கணவர்இறந்துவிட்ட நிலையில், மகன் மோகனகிருஷ்ணனுடன் (32) வசித்து வந்தார்.மோகனகிருஷ்ணனுக்கும் ப்ரியதர்ஷினி என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.
ப்ரியதர்ஷினியை வரதட்சணை கேட்டு விஜயலட்சுமியும் மகனும் தொல்லைபடுத்தி வந்தனர். இதனால்மனவேதனை அடைந்த ப்ரியதர்ஷினி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் விஜயலட்சுமியும், மோகனகிருஷ்ணனும்கைது செய்யப்பட்டனர். கடந்த 16ம் தேதி தான்ஜாமீனில் வெளியே வந்தனர்.
சிறையில் இருந்து வந்த பின்னர் தாயும் மகனும் அக்கம் பக்த்தில் யாருடனும் பேசவில்லை. இவர்கள்விரக்தியுடன் காணப்பட்டனர்.
இந் நிலையில் அவர்களது வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படவில்லை. நேற்று காலை அவர்களின்வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது.
இதையடுத்து போலீசுக்கு தகவல் போனது. போலீசார் வந்து வீட்டை உடைத்துப் பார்த்தபோது படுக்கைஅறையில் விஜயலட்சுமியும், மோகனகிருஷ்ணனும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர்.
முதலில் விஷம் குடித்து விட்டு பின்னர் தூக்கு போட்டுக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு அருகே ஒரு கடிதமும் இருந்தது. அதில், ப்ரியதர்ஷினியின் சாவுக்கு நாங்கள் காரணம் இல்லை.ப்ரியதர்ஷினியை நாங்கள் கொடுமைப்படுத்தவில்லை. இருப்பினும் எங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைதாங்கமுடியவில்லை. எனவே நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்.
எங்கள் சொத்துக்களை புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று கடிதத்தில் எழுதபட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications