இந்தியன் ஏர்லைன்ஸ்-சிங்கப்பூர் பயணிகள் பட்டபாடு
சென்னை:
சென்னையிலிருந்து நேற்று இரவில் சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானம் 5 முறை ரத்து செய்யப்பட்டு, இன்றுகாலை 9 மணிக்குத் தான் புறப்பட்டுச் சென்றது.மும்பையில் இருந்து சென்னை வழியாக சிங்கப்பூருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது. இந்தவிமானம் வழக்கமாக நள்ளிரவு 12.50க்கு சென்னையிலிருந்து புறப்படும்.
![]() |
நேற்று இந்த விமானத்தில் செல்ல 176 பயணிகள் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தனர். பாதுகாப்புசோதனைகளை முடித்துவிட்டு முடித்துவிட்டு விமானத்துக்காக காத்திருந்தனர்.
ஆனால், விமானம் குறித்த நேரத்தில் மும்பையிலிருந்து வரவில்லை. நள்ளிரவு 2.30 மணிக்கே விமானம்புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இரவு 10 மணிக்கே விமான நிலையம் வந்துவிட்ட பயணிகள் எரிச்சலுடன் பொறுமை காத்தனர். ஆனாலும்விமானம் இரவு 2.30க்கு வரவில்லை. இது குறித்துக் கேட்டால் சரியான பதிலையும் இந்தியன் ஏர்லைன்ஸ்தரவில்லை.
பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தனர் பயணிகள். ஒரு வழியாக அதிகாலை 3.20க்கு அந்த விமானம் வந்துசேர்ந்தது.
இதையடுத்து அதில் ஏற பயணிகள் தயாரான நிலையில், அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும்இதனால் இப்போது கிளம்பாது என்றும் காலை 4.30க்குத் தான் கிளம்பும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இரவு வந்தவர்கள் காலை வரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நெருக்கடியிலும் கொசுக் கடியிலும்காத்திருந்தனர். மணி 4.30 ஆனது. ஆனால் விமானம் புறப்படுவதற்கான அடையாளமே இல்லை. பயணிகளும்அழைக்கப்படவில்லை.
இதையடுத்து பயணிகள் கவுண்டர்களில் போய் சத்தம் போடவே, விமானம் 5.30க்குப் புறப்படும் என்ற பதில்கிடைத்தது.
ஆனால், காலை மணி 5.30 ஆனது, விடிந்தது. மணி 7 ஆனது, வெயிலும் அடிக்க ஆரம்பித்துவிட்டது. மணி 8ம்ஆகிவிட்டது. விமானம் கிளம்பவில்லை.
இதையடுத்து பயணிகள் குழந்தைகள், பெண்களுடன் விமான நிலையத்திலேயே போராட்டத்தில் குதித்தனர்.இந்தியன் ஏர்லைன்சுக்கு எதிராக கோஷமிட்டபடி வாசலுக்கு வந்தனர்.
இதைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் ஓடி வந்தனர். குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் கூட தராமல்,தண்ணீர் கூட தராமல் இரவெல்லாம் காத்திருக்க வைத்துவிட்டு இப்போது ஏன் வருகிறீர்கள் என்று கேட்டபடி சிலபயணிகள் அதிகாரிகளை அடிக்கப் பாய்ந்தனர்.
போலீசார் விரைந்து வந்து சமாதானப்படுத்தினர். பின்னர் பால், பிஸ்கெட், தண்ணீர் வழங்கி பயணிகளைஅமைதிப்படுத்தினர் அதிகாரிகள்.
அப்படியே மணி 8.30 ஆகிவிட்டது. விமானம் புறப்படாததால் மீண்டும் பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் விமானம் பழுது நீக்கப்பட்டுவிட்டதாகவும், பயணிகள் ஏறலாம் என்றும்அறிவிக்கப்பட்டது. கடும் எரிச்சலுடன் பயணிகள் விமானத்தில் ஏற, காலை 9 மணிக்கு ஒரு வழியாக புறப்பட்டதுஅந்த விமானம்.
வாழ்க இந்தியன் ஏர்லைன்ஸ்...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications