ஜீனா குமாரியின் வலி நிறைந்த பிளாஷ் பேக்!
சென்னை:
அரசு மருத்துவர் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் கூறிஅவரை உள்ளே தள்ளியுள்ள நாகர்கோவில் மாணவி ஜீனாகுமாரிக்கும், சாதாரணவாழ்க்கைக்கும் ஏழாம் பொருத்தம். அவரைத் தொடர்ந்து வரும் தொல்லைகளால்இந்த மாணவி பெரும் மன உளைச்சலுககு ஆளாகியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அறுகே உளள கூட்டமாவு கிராமம்தான்ஜீனாகுமாரியின் ஊர். இவரது தந்தை கோபாலன். தாயார் தங்கம்மாள்.
![]() |
பள்ளிப் பருவத்தில் இவரை ஜோன்ஸ் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்துள்ளார்.இவரது காதலை ஜீனா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜோன்ஸ் கடந்த2002ம் ஆண்டு ஜீனாகுமாரியின் மீது ஆசிட் வீற்றினார்.
இதில் ஜீனாகுமாரியும், அவரது தோழி சந்தியா எனபவரும் காயமடைந்தனர். இந்தசம்பவம் அப்போது தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியது.
போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிக்குச் சென்று வந்த ஜீனா குமாரி, பாதுகாப்பு கருதிசொந்த ஊரிலிருந்து நாகர்கோவிலுக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். அவரதுபடிப்புக்கு பல்வேறு தரப்பினரும் உதவினர். பள்ளிப் படிப்பை முடித்த ஜீனா குமாரி,வடக்கன்குளத்தில் உள்ள எஸ்.ஏ. ராஜா பார்மசி கல்லூரியில் பி.பார்மசி படிப்பில்சேர்ந்தார்.
அங்கும் வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் ஜோன்ஸ். 2003ம் ஆண்டு மார்ச்மாதம் 31 தேதி கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த ஜோன்ஸ், ஜீனாகுமாரி மீது மீண்டும்ஆசிட் ஊற்றினார்.
மீண்டும் பரபரப்பில் மூழ்கியது தமிழகம். ஜீனாகுமாரிக்கு ஆதரவாக பல்வேறு மகளிர்அமைப்புகள் களததில் குதித்தன. நெருக்கடி முற்றவே ஜோன்ஸ் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளே தள்ளப்பட்டார்.
அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஜீனா குமாரிக்கு ரூ. 50,000 நிதியுதவியை அரசுசார்பில் அளித்தார். மேலும் வடக்கன்குளம் கல்லூரியிலிருந்து சென்னை அரசுமருத்துவக் கல்லூரிக்கு ஜீனா குமாரி இடம் பெயரவும் உதவினார்.
அத்தோடு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஜீனாகுமாரிக்கு பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சை செய்யவும் தமிழக அரசு உதவியது. உடல் நலம் தேறிய ஜீனாகுமாரிசென்னை கல்லூரியில் பி.பார்ம் படிப்பைத் தொடர்ந்தார்.
இந் நிலையில் 2003ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி திடீரென தலைமறைவானார்ஜீனாகுமாரி. ஜோன்ஸ் தொல்லையால்தான் அவர் காணாமல் போனதாக கூறப்பட்டது.கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து திரும்பி வந்தார் ஜீனாகுமாரி.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, தன்னை ஒரு கும்பல்ஆந்திராவுக்குக் கடத்திச் சென்றதாகவும், அவர்களிடமிருந்து தப்பி பெங்களூர் சென்றுபின்னர் சென்னை வந்ததாக ஜீனா குமாரி தெரிவித்தார். அவர் தெரிவித்தத தகவல்கள்குழப்பமாக இருந்தாலும், காணாமல் போனவர் திரும்பி விட்டாரே என்ற நிம்மதியில்,போலீஸார் வழக்கை மூடினர்.
துரத்தித் துரத்திக் காதலித்த ஜோன்ஸை துச்சமென மதித்த ஜீனாகுமாரிக்கும் காதல்மலர்ந்தது. அவர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நீதிராஜன் என்பவரைக் காதலித்துதிருமணம் செய்து கொண்டார். சென்னை எழும்பூரில் குடியேறினார்.
திருமண பந்தத்தில் நுழைந்து படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்த ஜீனாகுமாரியின்வாழ்க்கையில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது- டாக்டர் பிரின்ஸ் பிரபாகரன் உருவில்.பிரின்ஸ் பிரபாகரனுக்கும் சொந்த மாவட்டம் கன்னியாகுமரிதான்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தனது தந்தையின் சிகிச்சைக்காக சென்றுவந்த ஜீனாகுமாரிக்கு, எதேச்சையாக பிரின்ஸுடன் அறிமுகம் ஏற்பட்டது.
![]() |
சொந்த மாவட்டமாச்சே என்று அவருடன் ஜீனாகுமாரி பேசப் போக, அவரது அழகில்அடிபட்ட டாக்டர் பிரின்ஸ், ஜீனா மீது மோகம் கொண்டார் தனது வயதை மறந்து.தனது எண்ணத்தை ஜீனாகுமாரியிடம் பிரின்ஸ் சொன்னபோது அதிர்ந்து போனார்ஜீனாகுமாரி.
நான் கல்யாணமான பெண், என்னைப் படிக்க விடுங்கள், தொல்லை பண்ணாதீர்கள்என்று ஜீனாகுமாரி சொன்னபோதும், காமம் கண்ணை மறைக்க தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி ஜீனாவை வீழ்த்த நினைத்து அவரே வீழ்ந்து போய் சிறைக்குள்அடைபட்டுள்ளார் டாக்டர் பிரின்ஸ் பிரபாகரன்.
டாக்டர் பிரின்ஸ் பிரபாகரன் தன்னிடம் நடந்து கொண்ட பாலியல் அத்துமீறல்கள்குறித்து ஜீனா குமாரி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஜீனாகுமாரி போலீசிடம்தந்துள்ள வாக்குமூலம் இதுதான்:
டாக்டர் பிரின்ஸ் பிரபாகரன் எனது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான்.இதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. எப்போது வேண்டுமானாலும் என்னுடன்பேசு என்று கூறி தனது செல்போன் எண்ணை அவர் என்னிடம் கொடுத்திருந்தார்.
ஒருமுறை நான் கருவுற்றேன். படித்துக் கொண்டிருக்கும்போது குழந்தை வேண்டாம்என்பதற்காக அபார்ஷன் செய்து கொள்ள முடிவு செய்து டாக்டர் பிரின்ஸைசந்தித்தேன். கடந்த மாதம்தான் அவரைப் பார்க்கப் போனேன். எனது கணவரைவெளியே அமர வைத்து விட்டு நான் மட்டும் உள்ளே போனேன்.
மாணவர் ஜோன்ஸ் என்னிடம் முன்பு நடந்து கொண்ட விவரங்களையெல்லாம்டாக்டரிடம் நான் ஏற்கனவே கூறியிருந்தேன்- எனது கணவருக்குக் கூட இதுதெரியாது. இதை தெரிந்து கொண்ட டாக்டர் பிரின்ஸ், அதை வைத்தே என்னை மிரட்டிவந்தார்.
உனது கணவரிடம் சொல்லி விடுவேன் என்று கூறி என்னை அடைய முயற்சித்தார்.அபார்ஷனுக்காக நான் சென்றபோது கூட எனக்கு முத்தம் கொடு என்று கூறிதொல்லை கொடுத்தார். தனி அறையில் நான் அவரிடம் சிக்கிக் கொண்டதால்,கதவைப் பூட்டி விட்டு என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.
நான் எவ்வளவோ முயற்சித்தும் அவர் விடாமல் தொல்லைப்படுத்தினார்.
மறு நாளும் வரும்படி கூறினார். உடல் நிலையை காரணமாக வைத்து நானும் வேறுவழியின்றி அவரிடம் சென்றபோது என்னிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றார்.ஆபாசமாக பேசினார். நான் புத்திசாலித்தனமாக எனது செல்போனில் அதை பதிவுசெய்து விட்டேன.
இதைத தெரிந்து கொண்ட டாக்டர் பயந்து போய் என்னை மன்னித்து விடு என்று கூறிஎனது காலில் விழுந்தார். அப்போது நான் ஏமாந்த சமயமாக பார்த்து எனதுசெல்போனை பறித்து அதில நான் பதிவு செய்து வைத்திருந்த அவரது பேச்சுக்களைஅழித்து விட்டார்.
பின்னர் அவரது ஜூனியர் டாக்டர்களிடம் சொல்லி எனக்கு கருக்கலைப்பு செயயவைத்தார். அதன் பின்னரும் தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். அவரதுதொல்லை பொறுக்க முடியாமல்தான் புகார் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்ஜீனாகுமாரி.
இதற்கிடையே, டாக்டர் பிரின்ஸ் பிரபாகரனை போலீஸார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினார்கள். அவரை அடுத்த மாதம் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜீனா நாடகமாடுகிறார்: டாக்டர் வாக்குமூலம்
இதற்கிடையே டாக்டர் பிரின்ஸ் பிரபாகரனிடம் போலீஸார் விசாரணை நடத்திவாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில் பிரின்ஸ் கூறியிருப்பதாவது:
ஜீனாகுமாரியை நான் முதலில் எப்போது சந்தித்தேன் என்பது எனக்கு சரயாகநினைவில்லை. கடந்த மே மாதம் 20ம் தேதியன்று காலை 11 மணியளவில்ஜீனாகுமாரியும், அவரது கணவரும் என்னை வந்து சந்தித்தனர். தான் கன்னியாகுமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று என்னிடம் ஜீனா குமாரி தெரிவித்தார். பின்னர் நான் 3மாதம் கர்ப்பமாக உள்ளேன். படிப்புக்கு இடையூறாக இருப்பதால் கலைக்க வேண்டும்என்று கூறினார்.
முதல் குழந்தை என்கிறீர்கள், எதற்காக கலைக்க வேண்டும் என்று கேட்டேன்.கண்டிப்பாக கலைக்க வேண்டும் என்று அவர் பரிதாபமாக கூறினார். இதையடுத்துநான் கருக்கலைப்புக்கு உதவுவதாக கூறி பெண் டாக்டர் ஒருவரை ஏற்பாடு செய்தேன்.நான் ஏற்பாடு செய்த பெண் டாக்டரை ஜீனாகுமாரியும், அவரது கணவரும் சென்றுசந்தித்தனர். ஜீனாகுமாரியை அந்த பெண் டாக்டர் பரிசோதித்துப் பார்த்தார்.
பின்னர் என்னிடம் மீண்டும் ஜீனாகுமாரியும், அவரது கணவரும் வந்தனர். கருஉருவாகி 10 வாரம் ஆகிறது என்று பெண் டாக்டர் தெரிவித்தாகவும், அதைக் கலைக்கரூ. 4,000 செலவாகும் என்று சொன்னதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து நான் அந்த பெண் டாக்டரிடம் போனில் பேசினேன். அப்போது அவர்கரு உருவாகி 10 வாரம் ஆகிறது. எனவே கலைப்பது சிரமம் என்றார்.
ஆனால், என்னிடம் 3 வாரம்தான் ஆகிறது என்று ஜீனாகுமாரி தெரிவித்திருந்தார்.இதனால் நான் குழம்பினேன். பி.பார்ம் படிக்கும் பெண்ணான உனக்கு கர்ப்பம்எத்தனை நாள் என்பது தெரியாதா என்று கண்டித்தேன்.
அப்போது திடீரென கோபமடைந்த ஜீனாகுமாரி, கருவைக் கலைக்க வேண்டும் என்றுகூறினால், செலவுக்கு வழி வகுக்கிறீர்களா என்று கோபமாக கத்தினார். பின்னர்என்னைத் திட்டியபடி கணவருடன் போய் விட்டார்.
ஜீனாகுமாரி திடீரென கோபமாக பேசியதால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போதுஎனது நண்பரான டாக்டர் சிவனேசன் ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்டுஜீனாவின் கணவர் என்னிடம் போனில் பேசி மிரட்டினார். டாக்டர் பிரபாகரனை ரூ.10,000 பணம் கொடுக்கச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் ஜீனாவை நான் கற்பழிக்கமுயற்சித்ததாக கூறி புகார் கொடுப்போம் என்று ஜீனாவின் கணவர் கூறியதாகஎன்னிடம் சிவனேசன் கூறினார்.
ஜீனா குமாரியின் நடவடிக்கை முற்றிலும் முரண்பாடாக உள்ளது. அவர் எதற்காகஇப்படி ஒரு புகாரைக் கொடுத்தார் என்றே தெரியவில்லை. அவர் சொல்வதுஅத்தனையும் பொய், நாடகமாடுகிறார் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications