நடிகை புகார்: முன்ஜாமீன் கோரும் ராதாரவி
சென்னை:
ஆள் வைத்துத் தன்னை ராதாரவியும், விஜயகாந்த்தும் தாக்கியதாக நடிகை தேவிகொடுத்துள்ள புகாரைத் தொடர்ந்து நடிகர் ராதாரவி முன்ஜாமீன் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
![]() |
நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டபோது அவரை எதிர்த்துப்போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர் தேவி. அத்தோடு நில்லாமல் விருத்தாச்சலம்தொகுதியிலும் விஜயகாந்த்தை எதிர்த்து தேவி போட்டியிட்டுத் தோற்றார்.
கடந்த ஆண்டு நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகிகள் பதவியேற்புவிழாவின்போது வந்த தேவியை சிலர் தாக்கினர். இதுகுறித்து நடிகர்கள் விஜயகாந்த்,ராதாரவி ஆகியோர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தேவி புகார்கொடுத்தார்.
இருவரும் சேந்து ஆள் வைத்துத் தன்னைத் தாக்கி விட்டதாக தேவி தனது புகாரில்கூறியிருந்தார். இருப்பினும் அப்போது ராதாரவி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்ததால்புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் தான் ஏற்கனவே கொடுத்த புகார் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரணிடம் மீண்டும நடிகை தேவி புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், புகாரில் சிக்கியுள்ள நடிகர் ராதாரவி முன்ஜாமீன் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த மனு நீதிபதி பாஷா முன்னிலையில்விசாரணைக்கு வந்தது.
மனு மீதான விசாரணையை வருகிற 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். தேவியின்புகார் குறித்து ராதாரவி கூறுகையில், தேவியின் புகாரில் சற்றும் உண்மை இல்லை.
சம்பவம் நடந்ததாக கூறப்படும் தினத்தன்று நான், விஜயகாந்த், நெப்போலியன்,சரத்குமார் ஆகியோர் விழா மேடையில் இருந்தோம். வெளியில் நடந்தது குறித்துஎனக்குத் தெரியாது. நான் அந்த சமயத்தில் தேவியைப் பார்க்கவே இல்லை.
அவரை அச்சுறுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர் சங்கத்திலிருந்துநீக்கப்பட்டு விட்டதால் தேர்தலில் போட்டியிடவே முடியாது.
இந்த சமயத்தில் இப்படி ஒரு புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் யாரோ சிலர் அவரைத்தூண்டி விட்டிருப்பதாக சந்தேகிக்கிறேன்.
எனக்கு அடுத்தடுத்து படங்கள் கையில் உள்ளன.
ஜூலை 3ம் தேதி வெரிகுட் படப்பிடிப்பு தொடங்குகிறது. 7ம் தேதி தாணுவின் படம்இருக்கிறது. அடுத்து சேரனின் மாயக்கண்ணாடி படத்திலும் நடிக்க வேண்டியுள்ளது.
நான் கைது செய்யப்பட்டு விட்டால் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்குநஷ்டமாகி விடும். அதனால்தான் முன்ஜாமீன் கோரியுள்ளேன் என்றார் ராதாரவி.
இதற்கிடையே தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சங்கம் சார்பில்போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்க பொருளாளர்கே.என்.காளை தலைமையில் நிர்வாகிகள் சிலர் ஆணையர் லத்திகா சரணை சந்தித்துபுகார் மனு கொடுத்தனர்.
அதில், நடிகை தேவி சங்கத் தலைவர் விஜயகாந்த்துக்குப் போட்டியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தை எதிர்த்து நின்றார்.
சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டார். அவர் மீது தனிப்பட்ட முறையில்விரோதத்துடன் நடந்து வருகிறார். இந்த நிலையில் தன்னை ஆள் வைத்து அடித்துவிட்டதாக காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாருக்கு நடிகர் சங்கம் உரிய விளக்கம் அளித்தது. அதை காவல் நிலையம்ஏற்றுக் கொண்டு விட்டது. இப்போது சுய விளம்பரத்திற்காகவும், நல்லதம்பிஎன்பவரின் தூண்டுதலின் பேரிலும் விஜயகாந்த், ராதாரவி ஆகியோர் மீது பொய்யானபுகார்களைக் கூறி பத்திரிக்கைள் மூலம் விளம்பரம் தேடி வருகிறார் தேவி.தன்னை அடித்ததாக தேவி கூறும் பிரவீண் குமார் என்ற செயற்குழு உறுப்பினர்சம்பவம் நடந்த அன்று ஊரிலேயே இல்லை. சபரிமலைக்குச் சென்றிருந்தார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில்குழப்பம் விளைவிப்பதற்காகவே இந்த பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார் தேவி.
அவர் மீதும், அவரைத் தூண்டி விடும் நல்லதம்பி மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்படடுள்ளது. இந்தப் புகாரையும் சேர்த்துவிசாரிக்க ஆணையர் லத்திகாசரண் உத்தரவிட்டுளளார்.













Click it and Unblock the Notifications